உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தீவிரமடைகிறது வெப்பச்சலன இடிமழை.. டெல்டா வெதர்மேன்

  • வேலூர்: காற்றழுத்த தாழ்வு பகுதியின் சாதகமான காற்று குவிதல் தமிழ்நாட்டின் மீது விழுவதன் காரணமாக செப் 19 முதல் 22 வரை 4 நாட்களுக்கு வெப்பச்சலன மழை தீவிரமடையும். வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரி யில் பரவலாக இடி,மின்னலுடன் கூடிய மழையும். ஒருசில இடங்களில் கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாக கூடும் என்று டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.

    Advertisement

    டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் கூறுகையில், "புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வெப்பச்சலன இடிமழை தீவிரமடையும். மத்திய கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக கூடும்.
    இத்தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுபெறுவதற்கு முன்பு தமிழ்நாட்டில் இரவு நேர வெப்பச்சலன மழையை தீவிரப்படுத்தும்.

    Advertisement

    வானிலை எதிர்ப்பார்ப்பு:

    ==> தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடிமழை இன்று முதல் கடலோர மாவட்டங்களிலும் மழை படிப்படியாக துவங்கும்.

    ==> காற்றழுத்த தாழ்வு பகுதியின் சாதகமான காற்று குவிதல் தமிழ்நாட்டின் மீது விழுவதன் காரணமாக செப் 19 முதல் 22 வரை 4 நாட்களுக்கு வெப்பச்சலன மழை தீவிரமடையும்.

    ==> குறிப்பாக இந்த காலக்கட்டத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரி யில் பரவலாக இடி,மின்னலுடன் கூடிய மழையும். ஒருசில இடங்களில் கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாக கூடும்.

    Advertisement

    ==> காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மற்றும் காரைககல் பகுதிகளிலும் செப் 19 முதல் 21 வரை 3 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. இம்மழை சம்பா விதைத்தவர்களுக்கு சாதகமாக அமையும் ஆனால் மழைப்பொழிவு பரவலாக பெய்யாது என்பது குறிப்பிடதக்கது.

    ==> தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழையை எதிர்ப்பார்க்கலாம்.

    ==> மேற்கு மாவட்டங்களான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் இடிமழை வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    ஒட்டுமொத்தமாக பார்த்தால் வங்ககடலில் உருவாகும் தாழ்வு பகுதி புயலாக வலுபெறுவதற்கு முன்பு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நல்ல மழையை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    பொதுமக்களும், விவசாயிகளும் இடி,மின்னலில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" இவ்வாறு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.

    English Summary

    In a weather update released today, 'Delta Weatherman' Hemachandar stated, "A new low-pressure area is forming. Convective thunderstorms will intensify. A new low-pressure area is likely to develop over the central-eastern Bay of Bengal within the next 48 hours. Before this system strengthens into a cyclone, it will intensify nighttime convective rainfall across Tamil Nadu."