Apple iPhone Duo: வந்தாச்சு ஆப்பிளின் Foldable iPhone.. விலை இவ்வளவா? அசத்தும் அம்சங்கள் என்னென்ன?

  • சென்னை: செல்போனில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் எப்போதுமே தனக்கென ஒரு புதிய பாணியை கடைப்பிடித்து வரும் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிளின் மடிக்கக் கூடிய ஐபோனை ( foldable smartphone) அறிமுகம் செய்திருக்கிறது ஐஃபோன் டியோ (iPhone Duo) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய ஐபோன் வழக்கமான ஸ்மார்ட் போன் பயன்பாட்டோடு டேப்லெட் போன்ற அனுபவத்தையும் வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    Advertisement

    உலகமே மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வு இன்று நடைபெற்ற கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐபோன் 18 சீரிஸ் போன்கள் மற்றும் ஏர்பாட்ஸ் 5 மற்றும் புதிய வாட் சிரீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

    Advertisement

    ஆப்பிளின் புதிய சிஇஓவாக பதவியேற்றுள்ள ஜான் டர்னஸ் தலைமையேற்று நடத்திய இந்த முதல் நிகழ்வைஉலகம் எங்கும் கோடிக்கணக்கானோர் நேரிலும் நேரலையிலும் பார்த்தனர். ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பட்டது.

    ஏற்கனவே சொன்னது போல உலகமே மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனான ஐபோன் டியோ இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை வழக்கமாக ஸ்மார்ட் போன் போலவும் பயன்படுத்தலாம், விரித்தால் பெரிய திரையுடன் டேப்லெட் போல பயன்படுத்தலாம். இதன் மூலம் வீடியோ பார்ப்பது, கேமிங், வீடியோ கால் உள்ளிட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

    Advertisement

    ஆப்பிளின் முதல் போல்டபிள் போன் என்பதால் இதன் விலை வழக்கமான iphone மாடல்களை விட அதிகமாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 256 gb சேமிப்பு திறன் கொண்ட ஐபோன் டியோ மாடலின் ஆரம்ப விலை சுமார் 2000 அமெரிக்க டாலராக இருக்கலாம். இந்திய மதிப்பில் பார்க்கும் போது ஏறக்குறைய 2 லட்சத்தை நெருங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் இந்தியாவில் என்ன விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஃபோனில் விற்பனை அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை சற்று அதிகமாக இருப்பதால் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த போனை வாங்குவார்கள் என தொழில் நுட்ப வட்டாரங்கள் சொல்கின்றன.

    Advertisement

    ஐபோன் டியோவின் முக்கிய சிறப்பம்சமே அதன் pஎரிய டிஸ்ப்ளேதான். போனை மடித்து வைத்திருக்கும் போது சுமார் 5.5 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே இருக்கும். போனை திறந்ததவுடன் சுமார் 7.8 இன்ச் அளவிலான பெரிய OLED திரை கிடைக்கும். இதனால் போன் ஸ்மார்ட்போன் மற்றும் சிறிய டேப்லெட் அனுபவத்தை வழங்கும். இதன் உட்புற திரை, iPhone 18 Pro Max-ன் திரையை விட சுமார் 50 சதவீதம் பெரியதாகவும், iPhone 18 Pro-வை விட சுமார் 80 சதவீதம் பெரியதாகவும் இருக்கும். மேலும், போனை Portrait மற்றும் Landscape என இரண்டு விதமாகவும் பயன்படுத்தும் வகையில் திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதில் இரண்டு அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரிய திரைக்கு ஏற்ற வகையில் iOS 27 தளத்திலும் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. iPhone Duo-வில் இரண்டு Home Screen-களை பயன்படுத்தும் வசதி உள்ளது. அதேபோல், பெரிய திரையில் இரண்டு செயலிகளை அருகருகே திறந்து பயன்படுத்தும் வசதியும் உள்ளது. உதாரணமாக, ஒரு பக்கத்தில் WhatsApp போன்ற மெசேஜிங் செயலியையும், மற்றொரு பக்கத்தில் Notes அல்லது இணையதளத்தையும் பயன்படுத்திலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபோன் டியோவின் பெரிய திரையை முழுமையாக பயன்படுத்தும் வகையில் வீடியோ பினிங் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஸ்பிளேவின் மேல்பகுதியில் வீடியோவை தொடர்ந்து ப்ளே செய்து கொண்டிருக்கும் போதே கீழே மற்றொரு செயலியை பயன்படுத்த முடியும். உதாரணமாக, கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டே மெசேஜ்களுக்கு பதிலளிப்பது, ஒரு வீடியோவை பார்த்துக்கொண்டே நோட்ஸ் எழுதுவது போன்ற வேலைகளை செய்ய முடியும்.

    Advertisement

    ஐபோனில் இதுவரை இல்லாத மற்றொரு முக்கிய வசதியாக Apple Pencil சப்போர்ட் இதில் உள்ளது. பெரிய திரையில் Apple Pencil மூலம் குறிப்புகள் எழுதுவது, வரைபடங்கள் வரைவது உள்ளிட்ட கிரியேட்டிவ் வேலைகளை மேற்கொள்வது போன்றவற்றை செய்ய முடியும். இதனால் மாணவர்கள், டிசைனர்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த போன் கூடுதல் வசதியை வழங்கக்கூடும். தற்போது இந்த ஆப்பிள் ஐபோன் டியோ இரண்டு நிறங்களில் கிடைக்கும் என ஆப்பிள் கூறியுள்ளது. அதாவது Star White மற்றும் Night Sky ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகமாகிறது.

    English Summary

    Apple iPhone Duo brings a foldable design, dual OLED displays, multitasking and Apple Pencil support with premium pricing.