சென்னை: நடிகை ஷோபனா என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய அழகான நடனமும், அவருடைய நடிப்பும் தான். குறிப்பாக பரதநாட்டியத்தில் அவருக்கென தனித்துவமான ஸ்டைல் இருக்கிறது. ஆனால் பல வருஷங்களாக டான்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவருக்கு இப்போது பாதங்களில் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக அவர் வீடியோ வெளியிட்டு, ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
ஷோபனா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், சென்னையில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் தானும் பாதிக்கப்பட்டதால் தன்னுடைய இரண்டு பாகங்களிலும் சில பிரச்சனைகள் இருக்கிறது, பாதத்தில் வளைவுகளுக்கு சப்போர்ட்டாக இருக்கும் தசை நார் பலவீனமாக இருப்பதால் அசோகரிகம் ஏற்படுகிறது. அதை தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. ஆனால் இதற்காக ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன்.
நடிகை ஷோபனா வெளியிட்ட வீடியோ
பல ஆண்டுகளாக தொடர்ந்து டான்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் இப்படி பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இப்பொழுது உள்ள தலைமுறை கலைஞர்கள் டான்ஸ் ஆடுவதற்கு முன்பு பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் அது போல கொடுக்கவில்லை. இன்றைய தலைமுறை கலைஞர் பின்பற்றுவது நல்ல விஷயம். அவர்கள் தொடர்ந்து வாம் அப் செய்து அதற்கு பிறகு பயிற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் இதுபோல பிற்காலத்தில் பிரச்சனைகள் வந்துவிடும். வாம்அப் பயிற்சிகளில் முக்கியத்துவத்தை இப்போது நான் உணர்ந்து இருக்கிறேன் என்று அவர் அந்த வீடியோவில் எமோஷனலாக பேசி இருக்கிறார்.
இது வெறும் ஒரு நடிகையின் உடல்நல பகிர்வு மட்டுமல்ல, டான்ஸை தொழிலாக பார்ப்பவர்கள் தங்களுடைய உடலை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சொல்லும் அனுபவ பாடமாக இருக்கிறது. குறிப்பாக தொடர்ந்து மேடைகளில் டான்ஸ் ஆடுபவர்கள் கால்களுக்கும் கணுகால்களுக்கும் ஏற்படும் அழுத்தத்தை அலட்சியப்படுத்த கூடாது என்று இவருடைய இந்த வீடியோ மூலம் சொல்லி இருக்கிறார்.
ஷோபனா தமிழ், மலையாளம், தெலுங்கு என பழமொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர். அவரை தமிழில் ரசிகர்களுக்கு பெரிய அளவில் பிரபலமாகியது தளபதி படம் தான். அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அவர் நடித்தது இப்ப வரைக்கும் பேசப்பட்டு வருகிறது. அதிலும் அந்த படத்தில் வந்த பாடல்களில் அவருடைய எக்ஸ்பிரஷன் அதிகமாக பேசப்பட்டது. அதுபோல மலையாளத்தில் மணிசித்திரதாழ் என்ற திரைப்படமும் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. நடிப்பை போலவே பரதநாட்டியதிலும் ஷோபனாவுக்கு தனி அடையாளம் இருக்கிறது சென்னையில் கலாபனா என்ற டான்ஸ் பள்ளியை நடத்தி வருகிறார். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சின்ன வயதிலேயே பல உடல்நல பிரச்சனைகளில் சிக்கி விடுகிறார்கள். என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும் முறையான சாப்பாடு, டயட் எல்லாம் ரொம்பவே அத்தியாவசியமாக இருக்கிறது. நம்முடைய தாத்தா காலத்தில் எல்லாம் 80, 90 வயசு வரைக்கும் அசால்டாக எல்லோரும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் 40 வயது கடப்பதே அதிசயம் என்று சொல்வது போல தான் மாறிக்கொண்டிருக்கிறது. அதனால் எந்த வேலை பார்த்தாலும் அதற்கான உடற்பயிற்சிகளையும் சரியாக செய்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஷோபனா வெளியிட்ட வீடியோவும் ஒரு உதாரணமாக இருக்கிறது.ஷோபனாவின் சினிமா பயணம்
பிக் பாஸ் 10ல் மதுரை பொண்ணு.. ஜீ தமிழ் சீரியல் வில்லி.. யார் இந்த நடிகை முத்தழகி?
உடற்பயிற்சி முக்கியம் பிகிலு