கொஞ்சம் குழம்புங்க ப்ளீஸ்....!
அச்சமில்லை...அச்சமில்லை... படம் பார்த்திருக்கிறீர்களா...?
அந்தப் படத்தில் ஒரு பெண் கேரக்டர் வரும். நடிகை யார் என்று தெரியவில்லை. அந்தப் பெண் என்ன செய்வார் தெரியுமா, எப்போது பார்த்தாலும் விடுகதைபோடுவார். யாரிடம்?. தனது காதலனிடம். இதனால், தனது காதலியைப் பார்க்கும் போதெல்லாம், அந்தக் காதலன் தலையைப் பிய்த்துக்கொள்வான்.
விடுகதை என்பது வாய் மொழி இலக்கியத்தின் ஒரு பகுதி. புதிரான கேள்வி என்பதே விடுகதை. இந்தப் புதிரை விடுவித்து அதனுள் இருக்கும் பதிலைக்கொண்டு வர வேண்டும்.
விடுகதைகள், உலகெங்கும் உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மாதிரி. ஆனால் எல்லாமே ஒன்றுதான். கிராமத்துப்பக்கம் போனால், பெண்களின் வாயைக் கிளறிப் பாருங்கள். விடுகதை, சும்மா அருவி மாதிரிக் கொட்டும். இதுக்கு வயசு வித்தியாசமே கிடையாது.எந்தப் பெண்ணைக் கேட்டாலும் விடுகதை கிடைக்கும்.
விடுகதையா இந்த வாழ்க்கை....அப்படின்னு ஒரு பாட்டு உண்டு. வைரமுத்து எழுதியது. புதிர் போன்றது, விடுவிக்க இயலாத பல முடிச்சுகளைக் கொண்டது இந்தவாழ்க்கை என்பதைச் சொல்லவே விடுகதை என்ற பதத்தை வைரமுத்து பயன்படுத்தியிருக்கிறார்.
சரி..எங்களுக்குத் தெரிந்த சில விடுகதைகளை உங்ககிட்டச் சொல்லி குழப்பப் போகிறோம். உங்களுக்கும் ஏதாவது தெரிந்தால் எங்களுக்குஅனுப்பலாம். சேர்ந்து குழம்புவோம்.
இப்ப கொஞ்சம் விடுகதைகளைப் பார்க்கலாமா..?
1. ஒரு சாண் குள்ளனுக்கு குடுமி மட்டும் அரை சாண். அவன் யார்?
2. அழகழகாய் வெள்ளரிக்காய். அடுக்கி வைத்த வெள்ளரிக்காய். அது என்ன?
3. பாறை மேலே கோரை. கோரைக்குள் குறவன். அது என்ன?
4. தண்ணீர் இல்லாமல் வளரும், தரையில்லாமல் படரும். அது என்ன?
5. குண்டுச் சட்டியில் கெண்டை மீன். அது என்ன?
இதுக்கெல்லாம் பதில் தெரியுமா...?
தெரியலைன்னா அடுத்த பக்கம் வாங்க...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications