தமிழ் சினிமாவின் முதல் இசை விருதுகள்!
எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மறுவாழ்வுக்கென பாடுபடும் ஜெயம் சாரிட்டபிள் ட்ரஸ்ட் இந்த விருதுகளை வழங்குகிறது. விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 18ம் தேதி சென்னையில் நடக்கிறது.
இதுகுறித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெ.செல்வகுமார் கூறியதாவது, தமிழ் சினிமாவின் 75 ஆண்டு காலத்தில் சினிமாவில் இசை துறைக்கு முதல் முறையாக விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழாவில் இசைஞானி இளையராஜா, யுவன்சங்கர் ராஜா, தேவா போன்ற பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் கிடைக்கு தொகையில் ஒரு பகுதி எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது நடிகர் கரண், பாடகி சின்மயி மூத்த பத்திரிகையாளர் ராம்ஜி ஆகியோர் உடனிருந்தனர்.
விருது பெறுவோர்:
உணர்வுப்பூர்வமான இசையமைப்பாளர் விருது ஏ.ஆர்.ரகுமான், யுவன்சங்கர் ராஜா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. பரத்வாஜ், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கு பாராட்டு விருது வழங்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷூக்கு சிறந்த இளம் இசையமைப்பாளர் விருது வழங்கப்படுகிறது.
வாழ்நாள் சாதனையாளர் விருது எம்.எஸ்.விஸ்வநாதன், பி.சுசீலா, டி.எம்.சவுந்திரராஜன், வாலி, கங்கைஅமரன் ஆகியோர் பெறுகின்றனர். சிறந்த பாடலாசிரியர் விருது வைரமுத்துவுக்கும், வர்த்தக ரீதியிலான சிறந்த பாடலாசிரியர் விருது பா.விஜய், முத்துக்குமார் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
கருப்பசாமி குத்தகைதார் படத்தில் இடம்பெற்ற உப்புக்கல்லு தண்ணீரு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, உன்னாலே உன்னாலே படத்தில் இடம்பெற்ற இருபாடல்களும் விருதுக்குகத் தேவாகியுள்ளன.
சிறந்த பாடகர் விருது எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும், சிறந்த பாடகி விருது சின்மயிக்கும் வழங்கப்படுகிறது. ராப் பாடகர் யோகி, சாதனா சர்கம், பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்ட இசை பிரபலங்கள் விருதுகளை பெறுகின்றனர்.













Click it and Unblock the Notifications