தமிழகத்தில் கேரளாவின் சுற்றுச்சூழல் பூங்கா
செங்கோட்டை: செங்கோட்டை தாலுகா பகுதி முன்பு கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுபாட்டில் இருந்தது. 1956ம் ஆண்டு செங்கோட்டை பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் செங்கோட்டை அடுததுள்ள பெரியபிள்ளை வலசையில் சுமார் 15 ஏக்கர் நிலம் தற்போது கேரள அரசு கட்டுபாட்டில் உள்ளது. கேரள அரசால் மரங்களை பாதுகாத்து வைக்க பயன்பட்டு வந்த இந்த நிலம் தற்போது உபயோகப்படுத்தபடாமல் இருந்து வருகிறது.
இந் நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் இங்கு எக்கோ டூரிசம் பார்க் அமைக்க கேரள அரசு முன்வந்துள்ளது. இந்த பார்க்குக்கான அடிக்கல் நாட்டு விழா பெரியபிள்ளை வலசையில் நடந்தது.
கேரள வனம் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் பினேய் அடிக்கல் நாட்டி பேசுகையில்,
கேரள மாநிலத்தில் இடது சாரி ஜனநாயக முண்ணனி அரசின் இரண்டாண்டு சாதனையை முன்னிட்டு கேரள அரசு தமிழகத்தின் செங்கோட்டை மற்றும் பொள்ளாச்சியிலும், கர்நாடகாவிலும் இதுபோன்ற சுற்றுலா மேம்பாட்டு அமைப்புகளை உருவாக்கவுள்ளது.
தமிழக-கேரள மாநிலங்களின் கலாச்சார உறவை பலப்படுத்தும் வகையில் இந்த பார்க் உருவாக்கப்படுகிறது. இங்கு முதல் கட்டமாக தகவல் மையம் உருவாக்கப்படும்.
இந்த கேந்திரத்தில் கேரளாவில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்கள் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். அத்துடன் தாவரவியல் பூங்கா, மூலிகை செடிகள் பூங்கா, சிறுவர், சிறுமியர் குளித்த மகிழ நீச்சல் குளம், இரவு நேரங்களில் தங்கி மகிழ தற்காலிக குடியிருப்புகள் ஆகியவையும் அமைக்க்பபடும்.
முதல் கட்டமாக ரூ. 50 லட்சம் மதிப்பிட்டில் இயற்கையோடு இணைந்த பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாகவுள்ளன என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications