பாலியல் தொந்தரவு தடுப்பு குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும்: ஞாநி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாடு நெல்லையில் வரும் 27 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முன்னிட்டு 12 சிறப்பு கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது.
பணியிடங்களில் பெண்கள் எனும் கருத்தரங்கம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. துணை வேந்தர் சபாபதி மோகன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் ஞாநி பேசியதாவது:
விவசாய தொழிலில் ஈடுபடும் பெண்கள்தான் அதிகமாக பாலியல் கொடுமைகளில் சிக்கி தவிக்கின்றனர். நாகரீகம் என்ற பெயரில் பெண்களிடம் ஆண்கள் செய்யும் சில்மிஷங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பெண்களுக்கு பாலியல் கொடுமைகளுக்கு எதிரான பயிற்சி அளிக்க தவறிவிட்டோம்.
இதுபோன்ற தருணங்களில் பெண்கள் அழுது விடுகின்றனர். அழுகை என்பது பயமல்ல. அழுகையை கோபத்தின் வெளிப்பாடு என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் பாரதி சொன்னது போல் அச்சம் தவிர்; ரௌத்ரம் பழகு என்பதை பெண்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் நடவடிக்கைகளை குடும்பத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். பெண் குழந்தைகளை சமையலுக்கும், ஆண்களை வருமானம் ஈட்டுவதற்கும் தயார் செய்யும் நிலையை கைவிடவேண்டும்.
நம் சமூகத்தில் ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள். பெண்கள் உருவாக்கப்படுகிறார்கள். இதனை மாற்ற வேண்டும் என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications