2008ன் முக்கிய சம்பவங்கள்!
13. நெகிழ வைத்த உறுப்பு தானம்
தமிழக மக்களை நெகிழ வைத்தனர் ஹிதேந்திரனின் பெற்றோர். அவர்கள் செய்தது சாதாரணமானதல்ல, தங்களது ஒரே மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து உயரிய இடத்தைப் பிடித்தனர். இதுபோன்ற தானங்களுக்கு பிள்ளையார் சுழியும் போட்டு வைத்தனர்.
சென்னை அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் அசோகன், புஷ்பாஞ்சலி தம்பதியின் ஒரே மகன்தான் ஹிதேந்திரன். செப்டம்பர் 20ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார் ஹிதேந்திரன்.
மூளை செயலிழந்தது. இனியும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கூறி விடவே, சட்டென சுதாரித்த அசோகன், புஷ்பாஞ்சலி தம்பதிகள், தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுக்கின்றனர்.
இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம் முதலியவற்ற செப்டம்பர் 21ம் தேதி தானமாக வழங்கினர். இதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு, காவல்துறையும், மருத்துவமனைகளகும் பேருதவி புரிந்தன.
ஹிதேந்திரனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளால் ஐந்து பேருக்கு மறு வாழ்வு கிடைத்தது.
இந்த உறுப்பு தானம் தமிழகத்தையே உலுக்கி விட்டது. முதல்வர் கருணாநிதி முதல் அத்தனை தலைவர்களும் ஹிதேந்திரனின் பெற்றோரை பாராட்டிப் புகழ்ந்தனர்.
ஹிதேந்திரனின் பெற்றோர் ஏற்படுத்தி வைத்த இந்த அருமையான செயல், தமிழகத்தில் பேரலையை ஏற்படுத்தி இன்று பலரும் மூளைச்சாவை சந்திக்கும் தங்களது குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள் விருது கொடுப்பதாக இருந்தால் அதற்கு முழுத் தகுதியும் படைத்தவர்கள் டாக்டர்கள் அசோகன் மற்றும் புஷ்பாஞ்சலி என்பதில் சந்தேகமில்லை.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications