பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் இன்று கிராமிய போட்டிகள்
நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் கல்லூரியில் கிராமியப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
இதுகுறித்து சேவியர் கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் மாணிக்கம் நிருபர்களிடம் கூறுகையில், பாளை சேவியர் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் சார்பில் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இடையே கிராமிய கலை போட்டிகளை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
7 பிரிவுகளில் 20 போட்டிகள் நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து 30 பள்ளிகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டிகள் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
இதில் ஓன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் தனிப்பாடல், குழு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்களுக்கான போட்டிகளில் அதிக புள்ளிகள் பெரும் பள்ளிக்கு லூர்து சுழற்கேடயமும், 6 முதல் 12ம் வகுபபுகளுக்கான போட்டிகளில் அதிக புள்ளிகள் பெரும் பள்ளிக்கு வானமாமலை சுழற்கேடயமும் வழங்கப்படுகிறது.
இன்றும், நாளையும் போட்டிகள் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications