முழுப் பெண்ணாக மாறிய அரவாணி!
சென்னை: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரவாணி ஒருவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு முழுப் பெண்ணாக மாறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்தவர் ஸ்வாதி (22). இவர் ஒரு அரவாணி. பெண் தன்மையுடன் இருந்த இவர் முழுப் பெண்ணாக மாற விரும்பினார்.
இதையடுத்து சென்னை வந்த அவர் அரசு பொது மருத்துவமனையை அணுகி முழுப் பெண்ணாக மாற அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து டாக்டர்கள் ஸ்வாதியை பரிசோதித்து, இரு தினங்களுக்கு முன், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
தற்போது ஸ்வாதி நல்ல உடல்நலத்துடன் உள்ளார். இரது விதைப் பை, ஆணுறுப்பு ஆகியவை அகற்றப்பட்டு விட்டன. ஆணுறுப்பு இருந்த இடத்தில் பெண்ணுறுப்பு போல மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. இருப்பினும் இவரால் கருத்தரிக்க முடியாது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஸ்வாதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால், அரசு பொது மருத்துவமனையில் சேர்த்ததால், இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அரவாணி ஒருவருக்கு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை இங்குதான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications