திருவாரூரில் 9ம் தேதி ஆழித் தேரோட்டம்

Subscribe to Oneindia Tamil

Tiruvarur Temple
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 9ம் தேதி பிரபலமான ஆழித் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வரலாற்று சிறப்புமிக்கதும் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேருமான திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் வருகிற வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதனையொட்டி அஜபா நடனத்துடன் தியாகராஜர் ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது.
இதனையொட்டி தியாகராஜர் சுவாமி எதஸ்தானத்தில் இருந்து தேவாசிரியர் மண்டபத்தில் வீற்றிருந்தார்.

அங்கு சுவாமிக்கு விசேஷ சாயரட்ச பூஜை நடந்தது. பின்னர் தியாகராஜர் தேவாசிரியர் மண்டபத்தில் இருந்து அதிர் வேட்டுக்கள் முழங்க அஜபா நடனத்துடன் மேள தாள இசை கச்சேரியுடன் புறப்பட்டு சன்னதி தெரு வழியாக வந்து ஆழித்தேரில் எழுந்தருளினார்.

ஆழித்தேரில் எழுந்தருளும் தியாகராஜருக்கு நேத்ரா விளக்குகள் மற்றும் அலங்கார விளக்குகளில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஆழித்தேர் முடியும் வரை தியாகராஜர் தேரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

ஆழித்தேரோட்டத்தில் விநாயகர், முருகன், தியாகராஜர், அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளின் 5 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

தேரோட்டத் திருவிழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+