25ம் தேதி குற்றாலம் சாரல் விழா தொடக்கம் - அமைச்சர்கள் பங்கேற்பு

குற்றாலம் கலைவாணர் அரங்கில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா வரும் 25ம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை நடக்கிறது.
குற்றாலம் கலைவாணர் அரங்கில் 25ம் தேதி மாலை 5 மணிக்கு சாரல் விழா துவக்க விழா நடக்கிறது. சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார். கலெக்டர் ஜெயராமன் வரவேற்கிறார். சாரல் விழாவை துவக்கி வைத்து வீட்டு வசதி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகிறார்.
கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்து சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், பல்வேறு போட்டிகளை துவக்கி வைத்து அமைச்சர் மைதீன்கான், குத்துவிளக்கேற்றி
அமைச்சர் பூங்கோதை பேசுகின்றனர். எம்பி லிங்கம், எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் முன்னிலை வகிக்கின்றனர்.
எம்பி ராமசுப்பு, எம்எல்ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், மாலைராஜா, அப்பாவு, வேல்துரை, வசந்தகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கிரகாம்பெல், கருப்பசாமி, சதன் திருமலைகுமார், வேளாண் விற்பனை குழு தலைவர் கணேசன், குற்றாலம் டவுண் பஞ் தலைவர் ரேவதி உள்பட பலர பேசுகின்றனர். டிஆர்ஓ ரமண சரஸ்வதி நன்றி கூறுகிறார்.
கலைநிகழ்ச்சிகள்
அன்று மாலை 5 மணிக்கு ஆழிதிருவரங்கம் சகோதரிகள் அபிராமி-ஆனந்தி ஆகியோரின நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, 5.30 மணிக்கு அரசு இசை பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம், இரவு 7 மணி்க்கு சின்ன திரை இயக்குனர் ராஜ்குமாரின் அசத்தபோவது யாரு நிகழ்ச்சி நடக்கிறது.
துவக்க விழா வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, பரதநாட்டியம், மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் தோட்டாக்குடி மாரியப்பன் குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், பொய்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் நிகழ்ச்சிகளும் நடக்கிறது என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை
இதற்கிடையே, குற்றாலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் கடந்த மூன்று வாரங்களாக சீசன் அருமையாக உள்ளது. குறிப்பாக கடந்த மூன்று தினங்களாக இடைவிடாமல் சாரல் தூறிக் கொண்டே இருக்கிறது. மெயி்னருவியில் பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் 2 பிரிவுகளையும் இணைத்து மூன்று அருவியாக தண்ணீர் கொட்டுகிறது.
பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் ஆர்பரித்து விழுகிறது. வேலைநாளாக இருந்த போதிலும் குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளை வரிசையில் நிறுத்தி 20 பேராக அனுமதித்தனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நேற்று இரவு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இரவு 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதி்க்கப்பட்டுள்ளது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications