காலமானார் 'நாத்திகம்' ராமசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மூத்த பத்திரிக்கையாளரான 'நாத்திகம்' ராமசாமி காலமானார். அவருக்கு வயது 77.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலஆழ்வார் தோப்பில் பிறந்த ராமசாமி, பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டு அவரது கொள்கைகளைப் பரப்ப 'நாத்திகம்' என்னும் பத்திரிகையை நடத்தி வந்தார்.
கடந்த 51 ஆண்டுகளாக இந்த பத்திரிக்கை இயங்கி வருகிறது.
சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சென்னையில் காலமானார்.
அவரது உடல் சென்னை கோடம்பாக்கம், என்.எஸ்.கே. சாலையில் உள்ள 'நாத்திகம்' பத்திரிக்கை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
மேலஆழ்வார் தோப்பில் அவரது உடல் அடக்கம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
மறைந்த ராமசாமிக்கு மனைவி, 6 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
அவரது குடும்பத்தாரை தொடர்பு கொள்ள: 99625 44024












Click it and Unblock the Notifications