பெண்களுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பு முகாம்
விருதுநகர்: பிளஸ் 2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர், கிருஷ்ணகிரி உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையாளர் ஏ.எஸ். ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுயுள்ளதாவது ...
பிளஸ் 2 முடித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
செப் டம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் விருதுநகர் வி.எச். என்.எஸ்.என். கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு ஆண் கள் கலைக் கல்லூரி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, திருத்தணி அரசு கலைக் கல்லூரி ஆகிய 5 இடங்களில் சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெறும் இந்த முகாமில் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் பன்னாட்டு செல் போன் நிறுவனம் பயிற்சி ஆபரேட்டர் வேலைக்கு 1500 பேர்களை தேர்வு செய்ய உள்ளது.
இதற்கு, பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். வயது 18 முதல் 23 -க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.4 ஆயிரம். அத்துடன் இலவச உணவு, மருத்துவ வசதி, 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பேருந்து வசதி உண்டு.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்களும் அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்கராம். இதற்காக எந்த வித பதிவு கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடதக்கது
பிளஸ் 2 முடித்த பெண்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்று தெரிவித்துக்கப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications