பார்வையற்ற வாலிபரை திருமணம் செய்த புரட்சி பெண்!
கோபி: ஈரோடு அருகே பார்வையற்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார் ஒரு புரட்சி பெண்.
அந்த பெண்ணின் பெயர் ரத்தினாள் (25). ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், இண்டியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கன் என்பவரின் மகள். இவர் எம்.காம் பட்டதாரி.
ஈரோடு மாவட்டம், நம்பியூரை சேர்ந்தவர் கருப்பசாமி (33). பார்வையற்றவர். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இசையில் நல்ல ஆர்வம் கொண்ட அவர் பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் திருமணத்தில் இருவரும் முதன் முறையாக சந்தித்துள்ளனர்.
ஆரம்பத்தில் நட்புடன் பழகிய இவர்கள் இருவரும், பின்னர் தீவிரமாக காதலிக்கத் துவங்கினர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, ரத்தினாள் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் தனது காதலில் உறுதியுடன் நின்ற ரத்தினாள் கருப்பசாமியை அழைத்துச் சென்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டார்.
பின்பு பாதுகாப்பு கோரி கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications