எல்லைப் பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்களுக்கு ஆணுறை வழங்க ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எல்லைப் பகுதி மற்றும் தொலைதூர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்காக 1,080 தானியங்கி ஆணுறை வினியோக இயந்திரங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் உள்ள பட்டாலியன்கள், அவுட் போஸ்ட் மற்றும் ராணுவ பிரிவு தலைமையகங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்படும் என துணை ராணுப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடும் பனியிலும், தொலை தூரத்திலும் தனிமையில் வாடும் ஜவான்களுக்கு 'பாதுகாப்பான செக்ஸை' உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
இந்த இயந்திரங்களை வாங்குவதற்காக இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையைச் சேர்ந்தவர்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.












Click it and Unblock the Notifications