ஜல்லிக்கட்டை தொழில் போல பாவிக்கக் கூடாது-தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. ஆனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் மூலம் இந்த பாரம்பரிய அடையாளத்துக்கு பேராபத்து வந்துள்ளது. ஜல்லிக்கட்டை தடம் தெரியாமல் அழித்து விட வேண்டும் என அவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஜல்லிக்கட்டை அனுமதித்துள்ளது. இன்னும் இறுதித்தீர்ப்பு வரவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஜல்லிக்கட்டு ஒரு தொழிலாக மாறி வருகிறது. இதை வைத்து பலர் பணம் பண்ணுகிறார்கள். இதை தமிழக அரசு அனுமதிப்பது கண்டித்தக்கது. இதை தொழிலாக பார்க்கக் கூடாது.
பொங்கல் பண்டிகை சமயத்தில் ஜல்லிக்கட்டை வைத்து நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். இதை எப்படி தமிழக அரசு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நடத்த அனுமதித்துள்ளது.
ஜல்லிக்கட்டை ஜனவரி- பிப்ரவரி என 2 மாதங்களுக்கு மட்டுமே நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும்,காப்புத் தொகையான ரூ. 2 லட்சம் என்பதை ரூ.20 லட்சமாக உயர்த்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் அடுத்த மாதத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
தமிழக அரசு தற்போது ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications