அஜ்மான் அமீரகத் தமிழர்களின் அமைப்பின் விழாவில் கி.வீரமணி

Subscribe to Oneindia Tamil

அஜ்மான்: அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சார்பில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 17.10.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.

அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அஜ்மான் முனைவர் மூர்த்தி தலைமை வகித்தார். அவர் தனது உரையில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதனைவிட சமுதாயத்திற்காக என்ன செய்தோம் என்பது தான் முக்கியம். அத்தகைய சிந்தையில் உதித்தது தான் திருவாரூர் அருகே துபாய் நகரம் என்றார்.

துவக்கமாக நிவேதிதா ஆனந்தன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

சபையர் சுவாமிநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். தனது தந்தைக்கு பெரியார் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை திருமணத்தை நினைவு கூர்ந்தார்.

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது சிறப்புரையில் மனிதநேயம் அழிந்துவிடவில்லை என்பதற்கு சுனாமியின் போது பல்வேறு பகுதிகளிலும் இருந்து கிடைத்த உதவிகள், சிலியில் சுரங்கத் தொழிலாளர்கள் மீட்க கிடைத்த உதவிகள் உள்ளிட்டவற்றின் மூலம் நினைவு கூர்ந்தார்.

சமுதாயத்திற்கு தேவை அறிவுப் புரட்சியே. ஆயுதப் புரட்சி அல்ல என்றார். வெளிநாடு வாழ் தமிழர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமது கட்சியின் பொதுக்குழுவில் முக்கியத் தீர்மானமாக நிறைவேற்றி சம்பந்தபட்டவர்களுக்கு எடுத்துச் சென்று அவை தீர்க்க ஆவண செய்யப்படும் என்றார்.

மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அஜ்மான் இந்திய சங்க தலைவர் அஹமத் கான் (கேரளாவைச் சேர்ந்தவர்) தனது உரையில் அஜ்மான் இந்திய சங்கத்தில் தமிழக மக்கள் இணைந்து சேவைபுரிய கேட்டுக் கொண்டார். தமிழ் மொழியின் தொன்மை தன்னை வியப்பதாக தெரிவித்தார். மேலும் தனது மனைவி ஒரு தமிழர் எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பெரியார் பன்னாட்டமைப்பின் மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்கள் தான் ஒரு மருத்துவன் என்பதனை விட பெரியாரின் தொண்டன் என்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் அமீரகத்தில் வருடந்தோறும் அனைத்துப் பகுதி அமைப்புகளும் இணைந்து தமிழர் விழா நடத்த வேண்டும் என்ற தனது ஆவலை வெளியிட்டார்.

ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழக தலைவர் கவிஞர் ராமலிங்கம், வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜ், குவைத் தமிழ்ச் சங்க தலைவர் டில்லி பாஷா என்ற அப்துல் காதர் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். அதனைத் தொடர்ந்து குவைத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது.

ராகவன் கவிதை வாசித்தார். சௌமியா பாடல் பாடினார். நிகழ்வினை ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் எழிலரசன் தொகுத்து வழங்கினார். கலை நிகழ்ச்சிகளை பிரியா தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+