For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3000 அரசு பள்ளிகளை தத்தெடுக்க திட்டம்-ஜக்கிவாசுதேவ் பேட்டி

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் 3000 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ஈஷா அறக்கட்டளைத் தலைவர் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஈஷா யோகா மையம் மற்றும் மத்திய அரசின் ஆயுஷ் உடன் இணைந்து ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ சிகி்ச்சை முறைகளை நாமக்கல் மாவட்டத்தில் துவங்கி 3 மாதங்கள் ஆகிறது. இதன் வெற்றியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொடங்க உள்ளோம்.

ஈஷா யோகா மையம் சார்பில் 8 மாதிரி பள்ளிகள் இயங்கி வருகிறது. இதுபோன்று தமிழ்நாட்டில் 206 தாலுகாக்களில் மாதிரி பள்ளிகள் தொடங்க முடிவு செய்துள்ளோம். ஆனால் அதற்கு பொருளாதாரம் பிரச்சனையாக இருந்தது. அரசுடன் இணைந்து மாதிரி பள்ளிகளை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

முதல் கட்டமாக கோவையில் 30, திருவண்ணாமலையில் 5, தர்மபுரியில் 5 அரசு பள்ளிகளை தத்தெடுத்துள்ளோம். 6 வருடத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாதிரி பள்ளிகளை உருவாக்க திட்டமிட்டு்ள்ளோம்.

தமிழகத்தில் 9 சதவிதம் தரிசு நிலங்கள் உள்ளன. இந்த தரிசு நிலங்களில் அரசு உதவியுடன் மரங்கன்றுகள் நட முயற்சி செய்து வருகிறோம். கல்வி, ஆரோக்கியம், சுற்றுபுற சூழல் ஆகிய மூன்றையும் வளர்ச்சி அடைய செய்வதுதான் எங்களது நோக்கம் என்றார் அவர்.

English summary
ISHA foundation to adopt 3000 govt schools in TN. While speaking to the reporters in Nagerkovil foundation Chairman Sadhguru Jaggi Vasudev said that, We have decided to adopt 3000 govt schools and develop them. In the first phase, we have adopted 30 schools in Coimbatore, 5 each from Thiruvannamalai and Dharmapuri. And also we are planning to develop the waste lands in TN, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X