மழை தீவிரம் : குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு-மெயினருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை
குற்றாலம்: பலத்த மழை காரணமாக குற்றாலத்தில் நேற்று காலை பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
கார்த்திகை மாதம் துவங்கியது முதல் அதாவது கடந்த 14 நாட்களாக வடகிழக்கு பருவமழை மலையடிவார பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 10 நாட்களில் ஆறு நாட்கள் குளிக்கத் தடை விதிக்கும் அளவுக்கு மெயினருவியில் தண்ணீர் கொட்டியது. நேற்று முன்தினம் பகல் முழுவதும் தடையின்றி குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மழை காரணமாக இரவு சுமார் 9 மணி அளவில் மீண்டும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இரவில் மழையின் அளவு அதிகரித்ததால் அதிகாலை வேளையில் மெயினருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாதுகாப்பு வளைவையும் தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் கொட்டியது. குற்றால நாதர் கோயில் பின்புறம் மற்றும் சன்னதி பஜார்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நேற்று கார்த்திகை மாதத்தின் இரண்டாவது திங்கள் கிழமை சோமவரம் என்பதால் அதிகாலை முதல் ஏராளமான சுமங்கலிப் பெண்கள் அருவியில் புனித நீராடி பூஜை நடத்துவதற்காக வந்திருந்தனர். அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் பெண்கள் குளிக்கும் பகுதியில் வழிந்தோடும் தண்ணீரில் குளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications