செம்மொழி மாநாடு நடத்திய முதல்வர் கருணாநிதிக்கு துபாயில் பாராட்டு
இந்த நிகழ்ச்சிக்கு துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி சுரேஷ் தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் சி. ஜெகநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக இந்திய கன்சுலேட்டின் வர்த்தகப்பிரிவு துணை கன்சல் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை நிறுவனப் புரவலர் ஏ. லியாக்கத் அலி வழங்கினார். இதனைத் தொடர்ந்து கலாபவன் மோகன் தலைமையிலான இசைக்குழுவினர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியினை ஏ. முஹம்மது தாஹா மற்றும் மீரா கிரிவாசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சி தொகுப்பாளரான மீரா கிரிவாசன் செம்மொழி மாநாட்டினை சிறப்புற நடத்திவரும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு. கருணாநிதி அவர்களுக்கு துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார்.
சிறுவர் முதல் பெரியவர் வரை பழைய பாடல்கள் முதல் புதிய பாடல்கள் உள்ளிட்டவற்றை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.













Click it and Unblock the Notifications