உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: 1,330 குறள் உள்ள மோட்டார் சைக்கிளில் பிரசாரம்
வேலூர்: ஊட்டியைச் சேர்ந்த இளைஞர் என்.ஆர்.செந்தில்குமார்(39) என்பவர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த,1,330 குறளையும் தனது மோட்டார் சைக்கிளில் எழுதி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் அருவங்காட்டை சேர்ந்த என்.ராமன் என்பவரின் மகன் இவர். உதகை அரசுக் கல்லூரியில் பி.ஏ.இளங்கலை முடித்துவிட்டு, தனியார் தொலைதொடர்புத்துறையில் மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவர் தனது இரு சக்கர வாகன பிரசாரத்தை கடந்த 6-ம் தேதி தொட்டபெட்டா-வில் தொடங்கினார். இவரின் மோட்டார் சைக்கிளில் 1,330 திருக்குறள்களும் எழுதப்பட்டுள்ளது.பிரசாரத்தின் போது மாநாடு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறார்.
நீலகிரி,கோவை, ஈரோடு, நாமக்கல்,சேலம்,தருமபுரி,கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்துள்ள அவர், அடுத்து சென்னை,விழுப்புரம்,திருவண்ணாமலை,புதுச்சேரி,கடலூர்,நெய்வேலி மாவட்டங்களில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு, சிதம்பரம் வழியாக கோவை செல்ல திட்டமிட்டுள்ளார்.
சுமார் 3,500 கிலோ மீட்டர் தூர சுற்றுப்பயணத்தின்போது, முக்கிய பிரமுகர்களிடம் கையொப்பம் பெற்று மாநாட்டின்போது தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கொடுக்கவுள்ளாராம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications