Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சங்கரன்கோவிலில் இன்று ஆடிதபசு விழா: பலத்த போலீஸ் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

Sankaranainar
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் இன்று ஆடிதபசு திருவிழா நடக்கிறது. இதையொட்டி திரளான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம கோமதி அம்பாளின் தேரோட்டம் நடந்தது. ஆடிதபசு விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, நடக்கிறது. தொடர்ந்து அம்பாள் தவக்கோலத்தில் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவாக தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை 4 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணராக அலங்கரிக்கப்பட்ட வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசு மண்டபத்துக்கு சென்றதும் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை தொடர்ந்து சுவாமி கோவிலுக்கும், அம்பாள் தபசு மண்டபத்துக்கும் செல்லும் நிகழ்ச்சியும் இரவு 12 மணிக்கு சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் இரண்டாம் தபசு காட்சியும் நடைபெறுகிறது.

ஆடிதபசு திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருவதால் அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், புளியங்குடி ரோடு, பொன் விழா மைதானம் ஆகிய 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை சார்பில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், நகர எல்லையில் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்ட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+