சங்கரன்கோவிலில் ஆடிதபசு கொடியேற்றத்துடன் துவக்கம்: 11-ம் தேதி ஆடிதபசு

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தமிழகத்தில் உள்ள சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடப்பது வழக்கம். அதில் ஆடிதபசு திருவிழா சிறப்பு பெற்று வி்ளங்குகிறது. இந்த ஆண்டின் ஆடிதபசு திருவிழா இன்று (1-ம் தேதி) துவங்கியது.

அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு கொடிமரத்தின் எதிரே கனகசண்டிக்கை பல்லாக்கில் அம்பாள் எழுந்தருளினார். தொடர்ந்து கொடி பட்டம் ரத வீதியில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வேதவிற்பன்னர்கள் ஆகமவிதிகளின்படி வேதமந்திரங்களை முழங்க தீபாராதனை நடந்தது.

காலை 6.25 மணிக்கு கண்ணன் பட்டர் கொடிபட்டம் ஏற்றினார். இன்று தங்கசப்பரத்தில் அம்பாள் வீதியுலா நடக்கிறது. தினமும் காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான 9-ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்பாள் ரதவீதியுலா, 10-ம் தேதி விழாவில் காலை கோவிலில் இருந்து அம்பாள் முளைப்பாரி எடுத்தல், அலங்காரத்தில் ரதவீதியுலா நடக்கிறது.

வரும் 11-ம் தேதி ஆடிதபசு நடைபெறுகிறது. அன்று காலை கோவிலின் உட்பிரகாரத்தில் மேற்கு பகுதியில் சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் ராஜாமணி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+