எங்கே நீ சென்று விட்டாய் ?

நான் பார்க்காத தருணத்தில்
பலமுறை நீ பார்த்தாய்….
இன்றோ
உனை எதிர்பார்த்து நிற்கின்றேன்
எங்கே நீ சென்றுவிட்டாய் ?
எதிர்பாரா தருணத்தில்
எத்தனையோ முத்தங்கள்
கேட்காமல் நீ கொடுத்தாய்….
இன்றோ
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
எங்கே நீ சென்றுவிட்டாய் ?
தோட்டத்து பூக்களெல்லாம்
உன் விரல் தொட
காத்திருக்க…
காற்றோடு கலந்து
எங்கே நீ சென்று விட்டாய் ?
மடியில் தலை சாய்த்த
மரகத மணித்துளிகள்…
தலையில் விரல் கோதிய
தங்க நிமிடங்கள்…
மார்பில் முகம் புதைத்த
முத்துத் தருணங்கள்
அத்தனையும்….
என் நினைவில்
வந்து வந்து போகுதடா !
நீ இல்லாத கணங்கள்
என் வாழ்வின் ரணங்கள்…
நனைந்த தலையணைகள்
என் கண்ணீர் கதை கூற…
பவுர்ணமி நிலவும்
பகலாய் காய…
எனைக் காண வருவாய் என
எதிர்பார்த்து ஏமாந்தேன்…
பார்த்துக் கொண்டிருக்கையிலேயே
பறந்து நீ போனதெங்கே ?
என் அன்புக் காதலா !
எனை விட்டு
எங்கே நீ சென்று விட்டாய் ?
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications