உகாதி திருநாள்: கருணாநிதி, ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மக்களுக்கு முதல்வர் கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி வாழ்த்து:
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் புத்தாண்டு நாளான உகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியாகவும், மனநியறைவுடனும் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரையும் திமுக அரசு அரவணைத்துச் செல்கிறது. உகாதி திருநாளுக்கான விடுமுறை முந்தைய அதிமுக அரசு காலத்தில் மறுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பின் திமுக அரசு தான் மீண்டும் உகாதி திருநாளுக்கு விடுமுறை வழங்கியது.
தெலுங்கு, கன்னட மொழிகளைப் பயில விரும்புவோருக்கு தமிழக பள்ளிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்தித்தந்தும், தனி வல்லுநர் குழுக்களை அமைத்து தரமான பாடநூல்களைத் தயாரித்து திமுக அரசு வழங்கியுள்ளது.
கர்நாடக அரசுடன் திமுக அரசு நல்லுறவு கொண்டுள்ளது. அதன் மூலம் அங்கு பல ஆண்டுகளாக மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலையைத் திறக்கவும், அதேபோன்று சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையைத் திறக்கவும் ஆவனம் செய்தது.
மேலும், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து சேரும் கிருஷ்ணா குடிநீர் தமிழக, ஆந்திர மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை வளர்க்கப்பயன்படும் என்பதால் ஆந்திர மாநில அரசுடனும் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வந்துள்ளது.
தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடம் உள்பட பிற மொழிகள் பேசும் மக்களின் நலனைக் காக்க திமுக அரசு தொடர்ந்து பாடுபடும். தமிழகத்தில் இன்று உகாதி திருநாள் கொண்டாடும் அனைத்து தெலுங்கு, கன்னட மக்களுக்கு எனது மனமார்ந்த நலவாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வாழ்த்து:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது உகாதி திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக்ததில் உள்ள தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக்காத்து அதேசமயத்தில் தமிழ் மக்களோடு ஒற்றுமையுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவரும் ஆண்டாக விளங்க வேண்டும் என்றும், வளத்தையும், நலத்தையும், வெற்றியையும் தரும் ஆண்டாக விளங்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்து என் இனிய உகாதி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications