லண்டன் தமிழ்ச் சங்க பொங்கல் விழா
தமிழ் பள்ளி மாணக்கர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி விழாவை துவக்கி வைத்தனர். தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த இளையோர்கள் மற்றும் முதியோர்களால் விழாவின் குத்துவிளக்கு ஏற்றப் பட்டது. இதை தொடர்ந்து நாதஸ்வர கச்சேரி சிறப்பாக நடைப்பெற்றது.
இங்கிலாந்து பாரளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் லண்டனை சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் லண்டன் தமிழ் சங்க நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
தமிழ்ச் சங்கத்தின் முதியோர்கள் குழுவினர் பல பாடல்களை மிகச் சிறப்பாக பாடினர். லண்டனை சேர்ந்த பரதக் கலைஞர் பரத நாட்டியம் மிகச்சிறப்பாக ஆடினர். தமிழ்ப் பள்ளி மாணக்கர் "பாட்டும் நானே! பாவமும் நானே!" என்ற பாடலை மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களின் கைத்தட்டலை அள்ளி சென்றார்.
அழிந்து வரும் தொன்மையான தமிழ்க் கலைகளுக்கு பெருமையளிக்கும் வகையில் தமிழ்ப் பள்ளி மாணவிகளும், குடும்பத் தலைவிகளும் இணைந்து ஆடிய கிராமிய நடனத்திற்கு பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணை எட்டியது. மாற்றோர் கலைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் நடைப்பெற்ற "தாண்டியா" நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமிகளின் நடனம் பார்வையாளர்களின் மனதைக் கொள்ளையடித்தது.
"செந்தமிழ் தேன்மொழியாள்" போன்ற பழைய பாடல்களுக்கு சிறியவர்கள் ஆடிய நடனத்திற்கு முதியவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். தமிழ்ப் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு நடனம், பாடல் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மக்கள் மனதை கவரும் வகையில் மிகச் சிறப்பாக வழங்கி சிறப்பித்தனர். தமிழ் பள்ளி மாணவ மாணவிகளால் திரைப்பட பாடல்களை கலவையாக கொண்டு வழங்கப் பட்ட நடன நிகழ்ச்சி விழா அரங்கை பார்வையாளர்களின் கரவோசையால் அதிர வைத்தது.
விழாவின் இறுதியில் லண்டன் "ராகா " மெல்லிசைக் குழுவினர் தமிழ் திரைப்பட பாடல்களை பாடி பார்வையாளர்களை நடனம் புரிய வைத்தனர். நடைபெற்ற அனைத்து கலைநிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வண்ணம் அமைந்திருந்தது
தகவல் - லண்டன் ஜாக்













Click it and Unblock the Notifications