திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழாவுக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே
திருச்செந்தூர்: திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் 13-ம் தேதி நடக்கிறது. இந்த திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு முதல் சிறப்பு ரயில் வரும் 13-ம் தேதி காலை 5.15 மணிக்கு புறப்பட்டு 6.55 மணிக்கு நெல்லை வந்து சேரும். 2-வது சிறப்பு ரயில் காலை 9.10 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கும், 3-வது சிறப்பு ரயில் திருச்செந்துரில் இருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.35 மணிக்கும் நெல்லை வந்தடையும்.
இதே போல் மறுமார்க்கத்தில் நெல்லை-திருச்செந்தூர் இடையே முதல் சிறப்பு ரயில் வரும் 13-ம் தேதி அதிகாலை 12.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 2 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
2-வது சிறப்பு ரயில் அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு 4.45 மணிக்கும், 3-வது சிறப்பு ரயில் 1.55 மணிக்கும், 4-வது ரயில் மதியம் 2 மணிக்கும் நெல்லையில் இருந்து புறப்பட்டு 3.40 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் திருச்செந்தூர்-நெல்லை இடையிலான அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications