அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் இலவச கணினி பயிலரங்கம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் கணினியில் தமிழை திறம்பட பயன்படுத்துவது குறித்த சிறப்பு கணினி பயிலரங்கம் துபாயில் வரும் 20ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இது குறித்த ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் வரும் 20ம் தேதி மாலை 5.30 மணிக்கு இலவச கணினி பயிலரங்கம் துபாயில் நடத்தப்பட உள்ளது. இதில் தமிழை கணினியில் சரளமாக எழுதுவதற்கான தொழிற்நுட்பங்கள், இ-மெயில், செல்போன், முகநூல்(பேஸ்புக்), பேச்சரங்கு உள்ளிட்டவற்றில் தமிழை பயன்படுத்துவது குறித்தும், வீட்டு கம்ப்யூட்டர்களில் தமிழ் மென்பொருட்களை(சாப்ட்வேர்) சுலபமாக பொருத்துவது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பயிலரங்கில் தமிழ் மென்பொருள்களும்(சாப்ட்வேர்), தமிழ் எழுத்துருகளும்(தமிழ் பான்ட்) உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். இலவசமாக நடத்தப்படும் இப்பயிரலரங்கில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும்.

இது குறித்து கூடுதல் விபரம் தெரிந்து கொள்ள [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பலாம். அல்லது 050 3445375 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிலரங்கம் நடக்கும் இடம் குறித்து முன்பதிவின் போது தெரிவிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+