துபாய் இந்திய துணை தூதரகத்தில் சமஸ்கிருத பேச்சு பயிற்சி வகுப்பு

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் இந்திய துணை தூதரகத்தில் சமஸ்கிருத பேச்சு பயிற்சி வகுப்பு மே 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

துபாயில் வசித்து வரும் இந்திய மக்கள் சமஸ்கிருத மொழியினை பேச்சு வழக்கில் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய அரசு, துபாய் இந்திய துணைத் தூதரகம் மூலம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் கட்ட பயிற்சி வகுப்பில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். சமீபத்தில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Sanskrit language class in Dubai

தற்போது இரண்டாம் கட்ட சமஸ்கிருத மொழி பேச்சு பயிற்சி வகுப்பு மே 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. மாலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும்.

Sanskrit language class in Dubai

இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் தங்களது பெயர் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+