தீ நாக்கே போதும் நிறுத்து. . .
உலகறியா வயதில் உருகிமாண்டதேனோ
அரசியல் ஆட்டம் ஆவி பறித்ததுவோ
ஆளும் விச விருட்சங்களால்
நாளைய விருட்சங்கள் முளையிலேயே
கருக்கப்பட்டனவோ கருத்தறுபட்டனவோ ?
நெஞ்சம் பதறுது
உள்ளம் குமுறுது
பொரித்து வைத்த புழுக்களாய்
பிஞ்சு உடல்கள் பிணக்குவியல்களாய்...
பொம்மைகளாய் அவை இருக்ககூடாதா - என
மனம் எண்ணி ஆறுதல் தேடுகின்றது.
பொசுக்கித்திண்ண தீ கூட துணிந்துவிட்டதே
என்ன நடக்கின்றது
ஏது நிகழ்கின்றது
புரியாமலேயே பொசுங்கி மாண்டனரே!
ஆயிரம் கனவுகளுடன்
ஆயிரம் ஆசைகளுடன்
அமர்ந்த பிஞ்சுகள்
ஆயுளின் நீட்சி இதுவரையென்று அறியவில்லையே!
கோர நிகழ்வை நினைக்க முடியவில்லை
ஜயோ, நெஞ்சு துடிக்கின்றுது
தீயே போதும் உன் கோரப்பசி
அடக்கு அடக்கு
திருமண மண்டபத்தில் நின் தாண்டவம்
தீர்ந்தது என்றிருந்தோம், - நீயோ
பிஞ்சு தோல் சுவைக்க நாக்கு நீட்டியிருக்கின்றாய்
ஒன்றா இரண்டா
ஒலம் அடங்கவில்லை
நாசி அழுகிறது ஊனுருகிய மணம்
நிறுத்து நிறுத்து
தீயே நிறுத்து உன் தீராத இக்கோபத்தை
பொசுக்கித் தின்ன உனக்கு
பூக்களா கிடைத்தன?
மொட்டவிழமுதலே - நீ
கருக்கியழித்துவிட்டாயே
புலன்கள் விழிக்க முன்னே
நீ புகுந்து கருக்கிவிட்டாய்
இத்துடன் நிறுத்து
ஓரு பிஞ்சின் உயிர்
ஓராயிரம் உயிரிற்கு நிகர்
போதும் நிறுத்து
தீயே நிறுத்து உன்
கோர தாண்டவத்தை
இதுவே இறுதியாயிருக்கட்டும்
- பரணி([email protected])
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications