
காலம் நகர்ந்தது..
கல்லூரி சென்றேன்..
அங்கும் அனுமதி ஜாதியின் அடிப்படையில்..
ஏட்டில் படித்தது..
காற்றோடு கலந்தது..
ஏட்டினை படித்தும் இந்த
நாடு மாறவில்லை.. மாற்றுங்கள் ஏடுகளையாவது..
"ஜாதிகள் உண்டடி பாப்பா.. வறுமையும் செழுமையும் ஜாதி அளக்கிறது
ஏற்கமுடியாமல் ஏற்றுக்கொண்டேன் வயதும் வந்தது திருமணம் செய்ய,
துணையை தேடி தினசரி திருப்பினேன்
ஜாதிக்கொரு வண்ணம் கண்டேன் அப்பாவிடம் அக்கறையுடன் வேண்டினேன்..
வேண்டும் மணப்பெண் வேற்று ஜாதியில்..
அவரும் உரைத்தார் உறுதியாக.. மணந்தாலும், துறந்தாலும்
வாழ்ந்தாலும், மரித்தாலும்
பிரிந்தாலும், சேர்ந்தாலும்
விடமுடியாது ஜாதியை காற்று புகாத கல்லறையில் கூட
ஜாதி புகுந்து விட்டது.. வேண்டும்..
வேறொரு ஜாதி
ஜாதி அற்ற மனித ஜாதி.. இவன்
ஜாதீயில் கருகியவன் - க.மோகனரங்கன்([email protected]) படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |