பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
வறண்டு போகும் வரை
நீரை உறிஞ்சி எடுப்பதால்
உறங்கும் பூமி- சற்று
புரண்டு படுக்கிறதோ?!
எதிர்காலம் கணிப்பதாய்
ஏமாற்றும் எத்தரை
ஏளனம் செய்யவே
எதிர்பாராது வருகிறதோ?!
ஆலைக் கழிவோடு
அடர்புகையும் சூழ்ந்ததால்
பூமி மூச்சுத் திணறி
புரையேறித் தும்மியதோ?!
நிரந்தரமல்ல -நாம்
நிறுவிய யாவுமே என
நினைவூட்டத்தான்
திடுமென வருகிறதோ?!












Click it and Unblock the Notifications