கண்ணீர் விடும் கடவுள்களுக்காக!
வீடெங்கனும் உறவினர்கள்
வீதியெங்கும் நண்பர்கள்
பெண்கள் தொடர்களைத்
தொடர முடியாமல் போனக்
கவலையில் அழுதுவைக்க
ஆண்கள் ஆவேசமாய் அரசியல் பேச!
சிரித்துக் கொண்டே கையசைத்து
மேல் நோக்கி புறப்படுகிறேன்!
அதிசயம் தேவதூதன்
சொர்க்க வாசல்
திறக்கிறான் எனக்கு!
"அவ்வளவு நல்லவனா நான்?
கேட்ட கேள்விக்கு
"இல்லையில்லை!
சொர்க்கத்தில் நுழைபவர்கள்
எண்ணிக்கைக் குறைந்து போனதில்
வரையறைகள் குறைக்கப்பட்டு விட்டன!
சத்தமாய் சிரித்து விட்டேன் நான் !
உள்ளே நுழைந்தால்
வள்ளுவனும் ஒளவையும்
சத்தமாய் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்
சத்தியமாய் புரியவில்லை;
சுத்தத் தமிழாயிருக்கும்!
சொர்க்கம்
வெறிச்சோடிக் கிடக்க!
பக்கத்திலிருந்த தூதனிடம்
"ஏனப்பா, எங்கே சிவனும்
மற்றையோரும்?"
"இப்போதே காண வேண்டுமா?
இரவு வரைக் காத்திருப்பாயா?
ஐயோ! மேலோகத்தில் இரவும் பகலும்
சில கோடி ஆண்டுகளல்லவா?
"இப்போதே!
"கொஞ்ச நேரம் நரகத்திலிருக்க
ஆசை போலும்!
"அய்யோ! என்ன சிவனும் திருமாலும்
நரகத்திலா ? ஏன்?? "
"அவர்களையேக் கேட்டுக் கொள் சொல்லித்
தள்ளிவிட்டான் அதல பாதாளத்தில்!
சுற்றிலும் தீயெரிய
பேய்கள் சுற்றித் தின்ன துறத்த
ஓடியோடி ஒரு அடியும் இனி நகர முடியாது
என்ற கணத்தில் நின்றால்,
அங்கே சவுக்கடி வாங்குவது
சிவனா?
எண்ணெய் சட்டியில்
சாய்ந்து வெந்து கிடப்பது
திருமாலா?
அய்யோ அங்கே
சுற்றிச் சுற்றிச் செக்கிழுப்பது
ஏசுவல்லவா?
நபிகளா? அது
நர மாமிசம் சமைப்பது?
"என்னப்பா இதெல்லாம்?"
சிவனிடம் கேட்டதற்கு
ஏசுவும், நபியும், திருமாலும், சிவனும்
கூட்டாய் சொன்னது;
"மனிதனின் பாவமேற்று
பாவமேற்று பகுதி நேரம்
நரகத்தில் வெந்து தணிகிறோம்!
விரைவில் முழு நேர வேலையாகும் போல!"
பொல பொலவென
கண்ணீர் விட்டார்கள்
கடவுள்கள்!!
கொஞ்சமாய் பாவம் செய்வதைக்
குறைத்துக் கொண்டாலென்ன?
"கண்ணீர் விடும் கடவுள்களுக்காக!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications