Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஞானமோ !

Subscribe to Oneindia Tamil

ஞானம் !

நேற்று கனவில்
தன் முதுமை கண்டான்
இன்று காலையில் ஓடுகிறான்
முதியோர் இல்லம் நோக்கி. . .
தாய், தந்தையை
தன் இல்லம் அழைத்து வர !

காதல் !

இரத்தச் சோகையாம் எனக்கு
மருத்துவமனையில் மரணப்படுக்கை
மனதிலோ. . . .
இளமையில் எவளோ ஒருத்திக்காக
நரம்பறுத்த இரத்தத்தால்
காதல் கடிதம் எழுதிய
மலரும்(மரண) நினைவுகள் !

கல்வி !

பள்ளிப் படிப்பைக்
கடந்த உன்மகன்
அடுத்து எங்கு பயணம் ?
மருத்துவமா ! பொறியியலா !
நண்பனைக் கேட்டேன்
நீதிமன்றம் என்றான்
நெற்றியில் அடித்தாற்போல்.

ஆகா! சட்டமா? என்றேன்.

அவன் சத்தமாய்ச் சொன்னான்.
மடையா!
நன்கொடை எவ்வளவு
தெரிந்து கொள்ள வேண்டாமா?

கடவுள் !

அழகிய அணிகலன்
உயரிய ஆடைகள்
உடலில் நறுமணம்
ஒப்பனைத் தோற்றம்
ஆடம்பர வாகனம்
அவசரமாய் ஆலயதரிசனம்
தொலைந்து போனது
ஒன்று மட்டும்
பக்தி !

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+