அரிசி கடத்தலில் பெண்கள்: கருணாநிதி வருத்த கவிதை

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள வேதனைக் கவிதை:
மகளிர் நலனை முன்னிட்டு மலிவு விலை அரிசி கொடுத்தால் - அதை
மகளிர் சிலரே கூட்டுச் சேர்ந்து கடத்தல் வேட்டை நடத்துவதோ?
தேட்டை போடும் கூட்டமொன்று இந்த தேசத்தில் இருக்கலாமா?
தேர்தல் அறிக்கை வாக்குறுதி; திமுக நிறைவேற்றிக் களிக்கும்போது; அதைத்
திருடிப் பிழைத்துத் திரவியம் குவிப்போர் திசை திருப்ப முனையலாமா?
தின்னக் கிடைத்த உணவில் மண்ணையள்ளிப் போடுவதுதான் நியாயமாகுமா?
எத்தனை உயிர்கள் வாழ்வதற்குப் பயன்படும் அரிசி
எத்தர்கள் கூட்டம் தின்று ஏப்பமிடுவதற்கோ; அடச்சீ!
அன்பும், கருணையும்தான், அம்மாவும் தாயும்; அன்னையுமென்பார்
அவர்களே அரிசி கடத்த ஆரம்பித்து விட்டால்;
அக்ரமச் செயல்களிலேதான் ஆணும், பெண்ணும் சமம் என்று
அடித்துப் பாட வருவான் புதிய பாரதி!
அதுவரையில் காத்திராமல்
அய்யாமாரே; அம்மாமாரே;-
அரிசி கடத்தல் விட்டொழிப்பீரே;
அல்லால் நல்லோர் பழிப்பாரே!
இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications