தாய் மண்ணுக்கு போகிறோம்
Subscribe to Oneindia Tamil
-பாரதி மோகன்
போர்கள்
இன்றைய
புழுதி காற்றோடு
போய் ஒழியட்டும்...!
பூபாளம் மட்டுமே
கேட்குமட் பொழுதுகள்
எங்கள் பூமியிலும்
புலரட்டும்...!
யுத்தத்தில் மடிந்த
எங்கள் உறவுகளின்
உயிர்கள்
இன்னொரு பிறவி எடுக்கட்டும்
இப்படியாய்
சேர்த்த கனவுகள்
நிரம்பி வடியும்
விளிம்பில்...!
அடைக்கலம் தந்த
அன்னிய தேசத்துக்கு
தலைவணங்கி விட்டு
அகதிகள் என்ற அடைமொழியை
அறுத்தெறிந்து
போகிறோம்...?
தாய் மண்ணுக்கு...!
இவர்களின்
இந்த கனவுகள்
விழிகளோடு மடிந்து விடாமல்
விடியலையும் சந்திக்கட்டும்.
-பாரதி மோகன்([email protected])












Click it and Unblock the Notifications