அக்கரைப் பச்சை
சுபமங்களா சேனலில் பெண்ணோவியம் நிகழ்ச்சியை நாள் தவறாது பார்த்து விடுவது மல்லிகாவின் வழக்கம்.மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை வேறெந்த வேலையும் கிடையாது. வாழ்க்கையில் சாதித்தபெண்களை நடிகை மனஸா பேட்டி காணும் நிகழ்ச்சிதான் பெண்ணோவியம். மனஸா இன்று பேட்டி கண்டதுவசந்தா என்னும் சமூக சேவகியை.
வசந்தா என்பது வேறு யாருமில்லை. மல்லிகா வீட்டிற்கு பக்கத்தில் வசிப்பவள்தான். சமூக சேவையில் தனக்கு வந்தஆர்வம், பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு, ஐந்தறிவு ஜீவன்களிடம் காட்ட வேண்டிய அன்பு என்று அநாயாசமாகப்பதிலளித்த வசந்தாவை நினைத்தால் பொறாமையாக இருந்தது.
இரண்டு குழந்தைகள் பெற்று, குடும்ப குண்டுச்சட்டியிலே குதிரை ஓட்டும் தனக்கு சமூக சேவை செய்யநேரமெப்படிக் கிட்டும்? இதற்கெல்லம் ஒரு கொடுப்பினை வேண்டும். அடுத்த பிறவியிலாவதுவசந்தாவாய்வாழ்க்கை அமைய வேண்டும்.
சில மாதங்களுக்குப் பின் வசந்தா பெண்ணோவியம் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்று மனஸா பேட்டிகண்டதுவேறு யாருமில்லை. பக்கத்து வீட்டு மல்லிகாவைத்தான். பன்னிரெண்டாவது வகுப்பில் தமிழ்நாட்டிலேயே முதல்மாணவனாக வந்தது சாட்சாத் மல்லிகாவின் மூத்த மகன்தான். அவளது பெண்ணோ பத்தாம் வகுப்புத் தேர்வில் 3பாடங்களில் சதம் போட்டிருந்தாள்.
பெற்றோரின் தியாகம்தான் தங்கள் வெற்றிக்குக் காரணமெனப் பிள்ளைகளின் பேட்டி பல்வேறுசெய்தித்தாள்களின் தலையங்கமாய் மின்னியது.
சமர்த்தாக வீட்டிலேயே இருந்து நாட்டுக்கு இரண்டு நல்மாணிக்கங்களைக் கொடுத்த மல்லிகாவை நினைத்தால்பொறாமையாக வந்தது. ஹூம் அவளது சாதனைப் பிள்ளைகள் எங்கே? பார்டர் மார்க்கில் பாஸ் செய்த என்பிள்ளை எங்கே? அடுத்த பிறவியிலாவாது பெரிதுவக்கும்படி மல்லிகா போல் மலரவேண்டுமென நினைத்துக்கொண்டாள் வசந்தா.
- வந்தியத்தேவன்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications