இனி வீடு தேடி வரும் AI டெலிவரி ரோபா.. உலகையே வியக்க வைத்த அபுதாபி! இதுதான் எதிர்காலமாம்!
அபுதாபி: ஐக்கிய அமீரக நகரங்களில் எப்போதுமே புதுமைகளுக்குப் பஞ்சம் இருக்காது. உலகையே வியக்க வைக்கும் பல புதுமைகளை ஐக்கிய அமீரகம் தொடர்ந்து அறிமுகப்படுத்தும். அப்படியொரு மெகா திட்டத்தை தான் இப்போது அபுதாபி அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டெலிவரி துறையையே மொத்தமாகப் புரட்டிப்போடும் என்றே சொல்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் நாம் பெரும்பாலான பொருட்களை வீடுகளுக்கே ஆர்டர் செய்கிறோம். கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் மெல்லக் குறைந்து வருகிறது. வசதி, ரேட் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். இதனால் இந்தத் துறையில் தொடர்ச்சியாகப் பல புதுமைகள் நடந்து வருகிறது.

டெலிவரி சிக்கல்
பொதுவாக இந்த ஆன்லைன் டெலிவரியில் last mile delivery எனப்படும் கடைசிக் கட்ட டெலிவரியில் தான் செலவு அதிகம். அதாவது நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள் உங்களது இருப்பிடத்திற்கு அருகே உள்ள ஹப்பிற்கு (Hub) வர கூட செலவு அதிகம் ஆகாது. ஆனால், அந்த ஹப்பில் இருந்து உங்கள் வீட்டிற்கு வரவே செலவுகள் அதிகமாகும். அந்தச் செலவைக் குறைக்கவே இப்போது பல்வேறு நிறுவனங்களும் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அப்படியொரு புதுமை ஐக்கிய அமீரக நகரங்களில் ஒன்றான அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டெலிவரி துறையில் புதிய சாதனையாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. மேலும், இது எதிர்காலத்தில் டெலிவரி துறை எப்படி இயங்கப் போகிறது என்பதையும் தீர்மானிக்கும் என தெரிகிறது.
அபுதாபி புதுமை
அதாவது அபுதாபி இப்போது ஏஐ மூலம் இயங்கும் டெலிவரி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதை இயக்க டிரைவர் யாரும் தேவையில்லை. தானாகவே ஏஐ உதவியுடன் டிரைவ் செய்து கொள்ளுமாம். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, மேம்பட்ட டெலிவரிகளுக்கு இது ஒரு தொடக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த டெலிவரி வாகனத்திற்குச் சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வ அனுமதியையும் அபுதாபி கொடுத்தது.. அடுத்த சில ஆண்டுகளில் இது படிப்படியாக நகர் முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.
செல்ஃப் டிரைவிங் கார்கள்
இந்த செல்ஃப் டிரைவிங் கார்கள் அபுதாபியைத் தளமாகக் கொண்ட K2 தொழில்நுட்ப நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் நேவிகேஷன் அமைப்புகள், மற்றும் மேம்பட்ட சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தாலும் கூட சரியாக வாகனத்தை இயக்க இந்த மூன்றும் உதவும். நகர பகுதிகள் மட்டுமின்றி, தொலைதூரப் பகுதிகளில் டெலிவரி செய்ய இந்த வாகனங்கள் ஏற்றதாக இருக்கும்.
ஏற்கனவே சில நாடுகளில் சோதனை முறையில் இதுபோன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட அபுதாபி இதை முழு வீச்சில் அமல்படுத்த இருக்கிறது. 2040-ம் ஆண்டுக்குள் எமிரேட்டில் அனைத்துப் பயணங்களில் 25 சதவிகிதம் ஸ்மார்ட் பயணங்களாக இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இதில் ஐக்கிய அமீரகம் தீவிரம் காட்டி வருகிறது.
ஏன் முக்கியம்
இது மட்டுமில்லாமல் டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் அபுதாபி பல புதுமைகளை முயன்று வருகிறது. டெலிரவரி டிரோன்கள் மற்றும் பறக்கும் டாக்ஸிக்களை ஏற்கனவே அவர்கள் சோதனை செய்துள்ளனர். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு ஒருங்கிணைந்த நேட்வோர்க்கை உருவாக்குவதே அவர்கள் திட்டமாக இருக்கிறது.
அபுதாபி பறக்கும் டாக்ஸிகள் மற்றும் ட்ரோன் டெலிவரிகளையும் சோதித்துள்ளது. இது தன்னாட்சி போக்குவரத்தில் உலகின் சிறந்த இடங்களில் அபுதாபியை நிலைநிறுத்தியுள்ளது. இந்த புதிய டெலிவரி சேவை ஒரு "முக்கியமான மைல்கல்" ஆகும். இது தளவாடங்களில் புரட்சியை ஏற்படுத்தி, வளைகுடாவில் எதிர்காலப் போக்குவரத்திற்கான ஒரு தரநிலையை நிர்ணயிக்கும்.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
கேரளா தேர்தலை பாதிக்கும் வளைகுடா போர்.. இரண்டிற்கும் என்ன சம்பந்தம்? ரொம்பவே கஷ்டம் தான் -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications