சனி வக்ர பெயர்ச்சியில் மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு வரும் அதிர்ஷ்டமும், ஆபத்தும்.. முழு பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

sani-vakra-peyarchi-what-kind-of-benefits-will-get-magaram-kumbam-meenam-rasi-in-this-period

சனி வக்ர பெயர்ச்சி

அந்த வகையில், வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.

அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகரம்

மகர ராசியினருக்கு ஏழரை சனி முடிந்து விடுதலை பெற்றிருப்பீர்கள். இப்போது வக்கிர சனி ஏற்பட்டுள்ளதால் வரும் 138 நாட்களுக்கு ஏழரை சனி பாதிப்புகளை காணும் அமைப்பு உள்ளது. ஜூலை 26 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பதால் உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. உங்களுக்கு ராசிநாதனே சனி பகவனாக இருப்பதால் மிகப்பெரிய துன்பங்கள், துக்கங்கள் ஏற்படாது.

ஆனால், சனி பார்க்கும் இடங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு விரக்தி மனப்பான்மை, கோபத் தன்மைகள், படிப்பில் வெறுப்பு, ஆசிரியருடன் ஒத்துப் போகாத தன்மைகள் ஏற்படும். சகோதர வர்க்கங்கள் எனும் இளையவர்கள் மூலமாக தொல்லைகள் வரும். உங்கள் கருத்தால் அவர்கள் விலகிச் செல்லும் வாய்ப்புள்ளதால், வாக்குவாதம், வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

பங்குச் சந்தை உள்ளிட்ட முதலீடுகளில் திட்டமிட்டு முதலீடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். இளையவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டாலும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி, குடும்ப உறவில் இணக்கமாகச் செல்வது நல்லது. பெரிய பாதங்கள் இந்த காலத்தில் ஏற்படாவிட்டாலும், அவரவர் பாதையில் செல்லட்டும் என்றும் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு ஏற்கனவே ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. இப்போது வக்ர சனி நடப்பதால் உங்களுக்கு ஜென்ம சனிக்கான பலன்கள் கிடைக்கும். புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களுடைய வேலை, கடமைகளை உங்கள் பாட்டுக்கு நீங்கள் செய்யலாம். கடன்களை கட்டுவது, வரவுகளை வரவு வைப்பது, தொழில் தொடங்குவது, தொழில் செய்வது என்று எல்லா வேலைகளையும் எப்போதும் போல செய்து கொண்டே இருக்கலாம்.

3 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் முயற்சிகளில் தொய்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேலைகளை தள்ளிப்போடுவது, வேலைகளை மறப்பது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் என்பதனால் இதனை தவிர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பெழுதி வைத்துக் கொண்டு ஒவ்வொரு வேலையாக செய்து முடிப்பது நல்லது. இதனால், பெரிய பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

சகோதரர் வகையில் ஏதாவது கோளாறு, பேச்சுவார்த்தைகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சனி பகவானை பொருத்தவரையில் கும்பத்திற்கு 7 ஆம் இடத்தையும் சனி பார்க்கிறார். 7 ஆம் இடம் என்பது கணவன், மனைவி, குடும்ப உறவுகள் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு கடன் பட வேண்டிய சூழல் ஏற்படும். பணப் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் பொருள்கள் விநியோகித்த இடத்தில் இருந்த சரியாக காசு, பணம் வராத சூழ்நிலை, பொருள்கள் சேதமடைவது போன்ற துன்பங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 138 நாட்களுக்குப் பிறகு இதுதொடர்பான எல்லா பிரச்சனைகளும் நிச்சயமாக நிவர்த்தியாகும்.

மீனம் ராசி பலன்

மீன ராசியினருக்கு ஏற்கனவே ஏழரை சனி ஜென்ம சனியாக இருந்தது. இப்போது சனி பகவான் வக்ரம் பெறுவதால் விரயச் சனியாக மாறும். 12 ஆம் இடத்தில் சனி உள்ளது. செலவுகள் குறையும். வரவுகள் அதிகமாக இருக்கும். எல்லா பிரச்சனைகளும் கட்டுக்கோப்பாக இருக்கும். உங்களை நீங்களே யாரென்று புரிந்து கொண்டு உங்கள் சொந்த வலிமையால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

சனி பகவான் 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வார்த்தையைவிட்டு சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களால் செய்ய முடிந்த வேலைகளை மட்டும் செய்கிறேன் என்று சொல்வது நல்லது. முடியாததை சொல்லி பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆவணங்களில் கையெழுத்து போடும்போது ஒருமுறைக்கு இருமுறை நன்றாகப் படித்துவிட்டு போடுவது நல்லது. குடும்பத்துக்கே செலவு செய்தாலும் அதில் கணக்குப் பார்க்காமல் செய்ய வேண்டும். செய்ததை சொல்லிக் காட்டினால் கண்டிப்பாக உங்களுக்கு எதிராக செல்லும் சூழல் ஏற்படும். பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. 138 நாட்களும் தினந்தோறுமே பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது.

6 ஆம் இடத்தை சனி இருப்பதால் எதிரிகள், கடன்கள், நோய்கள், சட்டம், வழக்கு, துன்பம், குறைகள், குற்றங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். எல்லா விஷயத்திலும் நன்மைகள் ஏற்படும். ஏதோ ஒரு நல்லது நடக்கிறது என்கிற நம்பிக்கை பிறக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றமும், நம்பிக்கையும் பிறக்கும். எதிரிகளை அழிப்பதற்கான நேரம் ஏற்படும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+