AI dubbing: வேலைக்கு உலை வைக்கும் AI.. ரோட்டில் இறங்கிய ஹாலிவுட் கலைஞர்கள்! என்ன நடக்கப்போகுதோ!
லண்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) பலரின் வேலைகளை பறித்து வருகிறது. இதுநாள் வரை டெக் துறையிலிருந்து பலரும் இது தொடர்பாக கவலைகளை எழுப்பி வந்த நிலையில், தற்போது ஹாலிவுட் திரைத்துறை கலைஞர்களும் இந்த பிரச்சனையை தீவிரமாக பேச தொடங்கியுள்ளனர். தங்கள் வேலையை காப்பாற்றிக்கொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அச்சுறுத்தலுக்கு எதிராக குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.
'போரிஸ் ரேலிங்கர்' என்று சொன்னால் பலருக்கும் இவர் யார் என்று தெரியாது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படத்தில் ஹீரோவுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் என்று சொன்னால் தெரிய வாய்ப்பு இருக்கிறது. அப்பேற்பட்ட திரைக்கலைஞர் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அச்சுறுத்தலுக்கு எதிராக களமிறங்கியிருக்கிறார்.

வேலையை பாதுகாக்க போராட்டம்
ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், "செயற்கை நுண்ணறிவால் எனது குரல் இன்னும் மாற்றப்படவில்லை என்றாலும், நான் அச்சுறுத்தலாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார். இதுபோன்ற டப்பிங் கலைஞர்களின் உரிமையையும், அவர்களது வேலையையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடமிருந்து பாதுகாக்க பிரான்ஸில் 'டௌச்பாஸ்மாவீஎஃப்' எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் 'போரிஸ் ரேலிங்கர்' தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தன்னுடைய பணியை பற்றி கூறிய அவர், "திரையில் தோன்றும் நடிகர் பேசும் மொழிக்கும், பார்வையாளர்கள் கேட்கும் மொழிக்கும் வேறுபாடு தெரியாத வகையில் டப்பிங்கை உருவாக்க நடிகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தயாரிப்பு இயக்குநர்கள், வசனங்களை மாற்றி அமைப்பவர்கள், ஒலி பொறியாளர்கள் என ஒரு குழுவே செயல்படுகிறது" என்று கூறியுள்ளார்.
டப்பிங் துறையின் வளர்ச்சி
நெட்ஃபிலிக்ஸ் போன்ற உலகளாவிய ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சியால், "ஸ்க்விட் கேம்" மற்றும் "லுபின்" போன்ற சர்வதேச திரைப்படங்களுக்கு டப்பிங் தேவை அதிகரித்துள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் 43% பார்வையாளர்கள் வசனங்களுக்கு பதிலாக டப்பிங் செய்யப்பட்ட படத்தைதான் பார்க்கிறார்கள். அவ்வளவு ஏன் நம்மூரில் கூட 'மணி ஹீஸ்ட்' சீரிஸை தமிழ் பார்க்கதான் எல்லோரும் விரும்புகின்றனர். அப்படித்தான் இந்த ஸ்பானிஷ் திரைப்படம் தமிழர்களுக்கு அறிமுகமானது.
ஏஐ வளர்ச்சி
பிசினஸ் ரிசர்ச் இன்சைட்ஸ் கருத்துப்படி, இந்த டப்பிங் தொழில் சார்ந்த சந்தை 2025 ஆம் ஆண்டில் 4.3 பில்லியன் டாலராகவும், 2033 ஆம் ஆண்டில் 7.6 பில்லியன் டாலராகவும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய்க்காக போட்டியிடும் ஓடிடி தளங்கள், விளம்பரதாரர்களை ஈர்க்கும் முயற்சியில் உள்ளன. இதனால், தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளுக்கான தேவை அதிகரிக்கக்கூடும். இப்படித்தான் ஏஐ தொழில்நுட்பங்கள் உள்ளே நுழைந்திருக்கின்றன.
போராட்டம் எதற்காக?
ஒரு காலத்தில் குதிரை வண்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தபோது திடீரென கார்கள் வந்தன. கார்களின் பயன்பாட்டுக்கு மக்கள் கடுமையாக எதிர்த்தனர். காரணம் கார்களை ஓட்ட சரியான சாலைகள் இல்லை. மட்டுமல்லாது கார்களின் வேகம் அதிகம் என்பதால் விபத்துகளும் அதிகமான நடந்தது. ஆனால் இப்போது திரைக்கலைஞர்கள் நடந்தும் போராட்டம் இது போன்றது கிடையாது. முழுக்க முழுக்க மனித தலையீடே இல்லாமல் திரையில் உணர்ச்சிகளை கடத்துவது சினிமா துறையை மக்களிடமிருந்து விலக்கிவிடும் என்று பலரும் எச்சரிக்கின்றனர்.
கலை நுண்ணறிவா? செயற்கை நுண்ணறிவா?
ஜெர்மனியில், 12 பிரபலமான டப்பிங் நடிகர்கள் "கலை நுண்ணறிவைப் பாதுகாப்போம், செயற்கை நுண்ணறிவை அல்ல" என்ற பிரச்சாரத்துடன் டிக்டாக்கில் வைரலாகி 8.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றனர். கலைஞர்களின் குரல்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை பயிற்றுவிக்கும் நிறுவனங்கள், கலைஞர்களிடம் வெளிப்படையான ஒப்புதல் பெற வேண்டும் என்றும், அவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
இணைதல் சாத்தியமா?
ஒருவரின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாக்கப்படாவிட்டால், யாரும் எதையும் உருவாக்க முன்வரமாட்டார்கள். ஏனெனில், அது திருடப்படும் என்ற எண்ணம் மேலோங்கும் என்றும் இந்த கலைஞர்கள் கூறுகின்றனர். செயற்கை நுண்ணறிவும், மனித கலையும் இணைந்து செயல்பட்டால், கலை துறை புதிய உச்சத்தை எட்டும். ஆனால் இந்த பயணித்தில் கலைஞர்கள் சுரண்டப்பட கூடாது என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சினிமா மட்டுமல்ல, எழுத்து, ஓவியம் என மற்ற அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. ஆனால், இதற்கான முறையான அனுமதியோ, இழப்பீடோ கொடுக்கப்படாமல் இருப்பதுதான் இதில் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களாகும்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications