ஏஐயை குறைச்சு மதிப்பிடாதீங்க.. பெரிய பிரச்சனையே வரப்போகுது.. ஏஐ துறையின் காட் பாதர் எச்சரிக்கை
சென்னை: செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகம் மற்றும் திசை குறித்து ஏஐ துறையின் காட் பாதர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன்ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இதில் உள்ள அபாயங்களை குறைத்து மதிப்பிடுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி: ஒரு மதிப்பீடு
செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி குறித்துப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். ஜெஃப்ரி ஹிண்டன், 'செயற்கை நுண்ணறிவுத் துறையின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் ஆவார். அவரும் இதில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், செயற்கை நுண்ணறிவின் அபாயங்களைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று ஜெஃப்ரி ஹிண்டன் கூறியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகளை தான் கவனிக்கத் தவறிவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் சிந்தனைத் திறனை மிஞ்சும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு பெருகி வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அபாரமான வளர்ச்சியை சந்தித்து வருவதால், அதன் பயன்பாடுகள் குறித்துக் கூடுதலான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தற்போதுள்ள தொழில் நுட்ப உலகில் பெரிய அளவில் பேசப்படுகிறது. அதன் முன்னேற்றம் குறித்துப் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதன் பாதுகாப்பு அம்சங்களும் கவனிக்கப்பட வேண்டும்.
ஏஐ வளர்ச்சி எச்சரிக்கை
அதேபோல் OpenAI, Google DeepMind மற்றும் Meta ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து, அவர்கள் உருவாக்கி வரும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏஐ எப்படி செயல்படுகிறது என்பதை யூகிக்க முடியவில்லை, ஏஐ செயல்படும் விதம் நாளுக்கு நாள் குழப்ப தொடங்கிவிட்டது என்று கூறி உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருவதால், மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிப் போகக்கூடிய அபாயம் இருப்பதாக உலகெங்கிலும் உள்ள முன்னணி AI நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
AI ஆராய்ச்சியில் மிகவும் மதிக்கப்படும் பெயர்களான ஜெஃப்ரி ஹிண்டன் மற்றும் யோஷுவா பெஞ்சியோ ஆகியோர், சக்திவாய்ந்த AI அமைப்புகள் அடுத்த சில வருடங்களுக்குள் உருவாகலாம் என்று கூறியுள்ளனர். 'AIயின் தந்தை' என்று அழைக்கப்படும் ஹிண்டன் , AI மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்றும், அதனால் நாம் தயாராக இல்லாத ஆபத்துகள் ஏற்படலாம் என்றும் எச்சரித்து உள்ளார்.
அணு ஆயுதத்தை விட மோசம்
தொற்றுநோய்கள் அல்லது அணு ஆயுதப் போர்களின் அபாயங்களைப் போலவே, AI மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் இணைந்து இது தொடர்பாக பொது அறிக்கை வெளியிட்டு உள்ளது. மனித விதிகளுக்கு சூப்பர்-இன்டெலிஜென்ட் AI அமைப்புகள் கட்டுப்படாமல் செயல்படும் வாய்ப்புகள் உள்ளன. பெரிய போர், இயற்கை பேரிடர் போன்ற மோசமான நிகழ்வுகளில் மனித இருப்பை அச்சுறுத்தக்கூடும் செயல்களில் ஏஐ ஈடுபடலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பில்லியனரான எலான் மஸ்க் மற்றும் AI முன்னோடியான ஸ்டூவர்ட் ரஸ்ஸல் உள்ளிட்ட பல தொழில்நுட்பத் தலைவர்கள், ChatGPT இன் தற்போதைய மாடல்களை விட வலுவான AI அமைப்புகளை உருவாக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அரசாங்கங்களும் நிறுவனங்களும் சரியான பாதுகாப்பு சோதனைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைச் செய்ய குறைந்தது ஆறு மாதங்களுக்கு இதுபோன்ற வேலைகளை நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications