மொத்தமாக மாறுகிறது Gmail.. 22 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளே வரும் AI.. இனி எல்லாமே ரொம்ப ஈஸி!

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: கூகுள் நிறுவனம் இப்போது ஜிமெயிலில் ஒரு அட்டகாசமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நீங்கள் மெயில் அனுப்பும் முறையே மொத்தமாக மாறப் போகிறது. 22 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக AI உடன் சேர்ந்து ஜிமெயில் மொத்தமாக மாறுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இணையத்தைப் பயன்படுத்தும் அனைவரும் நிச்சயம் மின்னஞ்சல், அதாவது மெயில் வைத்திருப்போம். அதிலும் கிட்டத்தட்ட அனைவருமே கூகுளின் ஜிமெயிலை தான் வைத்திருப்பார்கள். கடந்த 2004ல் கூகுள் நிறுவனம் ஜிமெயிலை அறிமுகப்படுத்தியது. அப்போது முதலே ஈ-மெயில் என்றாலே அது கூகுளின் ஜிமெயில் தான் என்ற அளவுக்கு அது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

How to Use Gmail s New AI Tools Help Me Write Smart Search AI Inbox amp amp More Powered by Gemini 3

22 ஆண்டுகளுக்குப் பிறகு

இதற்கிடையே சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் நிறுவனம் ஜிமெயிலில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுடன் (AI) ஜிமெயிலை மொத்தமாக மாற்றி அமைத்துள்ளது கூகுள். உலகளவில் சுமார் 300 கோடி யூசர்களை கொண்டுள்ள கூகுள், நிறுவனத்தின் இந்த மாற்றம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜிமெயிலும் கூட வெறுமன மெயில் அனுப்பும் சாதனம் என்பதில் இருந்து ஒரு டிஜிட்டல் உதவியாளர் என்று மாறிவிடும்! இதில் பல புதிய வசதிகளைக் கூகுள் கொண்டு வந்துள்ளது.

மெயில் அனுப்பலாம்

Help Me Write என்ற அம்சம் மூலம் மெயில் எழுதும் சிரமம் நமக்குக் குறையும். பயனர்கள் டைப் செய்யும்போதே, ஜிமெயிலில் இருக்கும் ஏஐ வாக்கியங்களைப் பரிந்துரைக்கும்.. வாக்கியங்களைச் சரி செய்யும் அல்லது முழு மெயிலை கூட டைப் செய்து கொடுக்கும். அதுவும் உங்கள் ஸ்டைலை புரிந்து கொண்டு, நீங்கள் டைப் செய்வது போலவே ஒரு மெயிலை ரெடி செய்து கொடுக்கும். அதாவது எல்லாருக்கும் ஒரே போன்ற மெயிலாக இருக்காது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மெயில் என்பது போல இருக்கும். அந்த வெர்ஷனை கூட நீங்கள் படித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

கூகிள் ப்ரோ மற்றும் அல்ட்ரா சேவைகளை வைத்திருப்போருக்கு "ஸ்மார்ட் தேடல்" (Smart Search) வசதி கிடைக்கிறது. அதாவது பொதுவாக நாம் ஜிமெயிலில் பழைய மெயிலை தேட வேண்டும் என்றால் செர்ச் இடத்தில் டைப் செய்வோம்.. அது கீவோர்ட்டை ஒப்பிட்டு மெயில்களை எடுத்து வந்து கொடுக்கும். ஆனால், ஸ்மார்ட் தேடல் வசதி மூலம் நீங்கள் கீவோர்ட் டைப் செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. நேரடியாக என்ன வேண்டுமோ அதை டைப் செய்யலாம்.

ரொம்ப ஈஸி

உதாரணமாக "கடந்தாண்டு நவம்பரில் நான் புக் செய்திருந்த பஸ் டிக்கெட் மெயில் தேவை" என்று நார்மல் கேள்வி போலவே கேட்கலாம். ஜிமெயில் உங்கள் இன்பாக்ஸை ஸ்கேன் செய்து, துல்லியமான முடிவுகளை வழங்கும். இது தவிர அமெரிக்காவில் சில குறிப்பிட்ட பயனர்களிடம் "AI இன்பாக்ஸ்" (AI Inbox) என்ற வசதியும் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மெயில்களை ஸ்கேன் செய்து, கவனிக்கப்படாத நினைவூட்டல்கள், செய்ய வேண்டிய வேலைகளை நமக்கு எடுத்து வந்து காட்டும். இது ஜிமெயிலை மெயில் மட்டும் அனுப்பும் இடம் என்பதில் இருந்து யூசர்கள் தங்கள் வேலைகளை நிர்வகிக்க உதவும் ஒரு அமைப்பாக மாற்றுகிறது.

ஜெமினி

இந்த அம்சங்கள் அனைத்தும் கூகிளின் சமீபத்திய லார்ஜ் லெங்குவேஜ் மாடலான ஜெமினி 3 மூலம் இயங்குகின்றன. ஜெமினி ஏஐ ஜிமெயிலை வெறுமன கீவோர்ட்டை ஒப்பிட்டுப் பார்த்து ரிசல்ட் தரும் கருவி என்பதில் இருந்து எந்தச் சூழலுக்கு ஒரு விஷயத்தைத் தேடுகிறோம் என்பதைப் புரிந்து அதற்கேற்ப ரிசல்ட்டை காண்பிக்கும் ஒரு கருவியாக மாற்றுகிறது.

இவை அனைத்து அட்டகாசமான வசதிகள் தான் என்றாலும் இது தனியுரிமை சார்ந்த கேள்விகளையும் எழுப்புகிறது. இதில் ஏஐ நமது அனைத்து மெயில்களையும் படிக்கும் என்பதால் சஒரு தரப்பினர் இதற்குக் கவலை தெரிவித்துள்ளனர். அதேநேரம் மெயிலில் என்ன இருக்கிறது என்பதை வைத்து ஜெமினி மாடல்கலுக்கு பயிற்சி அளிக்கப்படாது என்றும் இதனால் யூசர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+