AI வீடியோ மேக்கிங் மாடல் V1-ஐ அறிமுகப்படுத்தியது 'மிட்ஜர்னி'! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்
வாஷிங்டன்: பிரபல செயற்கை நுண்ணறிவு (AI) பட உருவாக்கும் நிறுவனமான மிட்ஜேர்னி, விரைவில் AI வீடியோ மேக்கிங் மாடலை வெளியிட இருப்பதாக கூறி வந்தது. இந்நிலையில் நேற்று தனது AI வீடியோ உருவாக்கும் மாடல் V1-ஐ அறிமுகப்படுத்தியது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த வீடியோ மேக்கிங் மாடலாகும்.
V1 மாடலில், பயனர்கள் படத்தை பதிவேற்றம் செய்து, அதை அடிப்படையாகக் கொண்டு நான்கு ஐந்து-வினாடி வீடியோக்களை உருவாக்கிக்கொள்ள முடியும். மிட்ஜேர்னியின் முந்தைய பட உருவாக்க மாடல்களைப் போலவே, V1 மாடலையும் டிஸ்கார்ட் (Discord) செயலி மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது, இது இணையத்தில் மட்டுமே கிடைக்கிறது.

மிட்ஜேர்னியின் புதிய V1 வீடியோ மாடல்
மிட்ஜேர்னியின் இந்த புதிய முயற்சி, ஓபன்ஏஐயின் (OpenAI) சோரா (Sora), ரன்வேயின் (Runway) ஜென் 4 (Gen 4), அடோபின் (Adobe) ஃபயர்ஃப்ளை (Firefly), மற்றும் கூகுளின் (Google) Veo 3 போன்ற பிற நிறுவனங்களின் AI வீடியோ உருவாக்கும் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காக AI வீடியோ மாடல்களை உருவாக்கி வரும் நிலையில், மிட்ஜேர்னி மட்டும் தனித்துவமான AI பட மாடல்களை உருவாக்கி வருகிறது.
மிட்ஜேர்னியின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஹோல்ஸ், இது குறித்து கூறுகையில், "ஹாலிவுட் திரைப்படங்கள் அல்லது விளம்பரங்களுக்கான காட்சிகளை உருவாக்குவதை விட, AI வீடியோ மாடல் மூலம் 'நிகழ் நேர திறந்த-உலக உருவகப்படுத்துதல்களை' உருவாக்கும் இலக்கை நோக்கி நாங்கள் நகர்ந்து வருகிறோம். AI வீடியோ மாடல்களைத் தொடர்ந்து, 3D ரெண்டரிங் மற்றும் நிகழ்நேர AI மாடல்களை உருவாக்கவும் மிட்ஜேர்னி திட்டமிட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்நிறுவனம் சமீபத்தில் சிக்கல் ஒன்றை சந்தித்திருந்தது. அதாவது, மிட்ஜேர்னியின் AI பட மாடல்கள், டிஸ்னி மற்றும் யுனிவர்சல் போன்ற ஹாலிவுட் திரைப்பட ஸ்டுடியோவின் பதிப்புரிமை பெற்ற ஹோமர் சிம்ப்சன் மற்றும் டார்த் வேடர் போன்ற கதாபாத்திரங்களை சித்தரிக்கிறது என்று ஸ்டுடியோக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதற்காக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது.
AI பட மற்றும் வீடியோ உருவாக்கும் மாடல்களின் அதிகரித்து வரும் பயன்பாடு ஹாலிவுட் ஸ்டுடியோக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த AI கருவிகள் அவர்களின் துறைகளில் உள்ள படைப்பாளிகளின் வேலையை பறிக்க செய்யும் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும், இந்த தயாரிப்புகள் பதிப்புரிமை பெற்ற படைப்புகளில் இருந்து காப்பி அடித்தவை என்றும் பல ஊடக நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
மிட்ஜேர்னி நிறுவனம், மற்ற AI பட மற்றும் வீடியோ நிறுவனங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட முயற்சி செய்தாலும், இந்த குற்றச்சாட்டுகளை தவிர்க்க முடியவில்லை. பொதுவாக ஒரு படத்தை உருவாக்க ஆகும் கட்டணத்தை விட, வீடியோ உருவாக்கத்திற்கு 8 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் என்று மிட்ஜேர்னி தெரிவித்துள்ளது.
V1 மாடலை முயற்சிப்பதற்கான மலிவான வழி, மாதத்திற்கு $10 அடிப்படை திட்டத்தில் சந்தா செலுத்துவது ஆகும். $60 ப்ரோ மற்றும் $120 மெகா திட்ட சந்தாதாரர்கள் "ரிலாக்ஸ்" முறையில் அன்லிமிட்டெட் வீடியோக்களை உருவாக்க முடியும். மேலும், வீடியோ மாடல்களுக்கான கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய மிட்ஜேர்னி திட்டமிட்டுள்ளது.
V1 மாடல் - சிறப்பம்சங்கள்
V1 மாடலில் உள்ள சில தனிப்பயன் அமைப்புகள் (Custom settings), பயனர்கள் வீடியோக்களின் வெளியீட்டை கட்டுப்படுத்த உதவுகின்றன. பயனர்கள் ஒரு படத்தை தானாக அசைக்கவோ (Automatic animation) அல்லது தாங்கள் விரும்பும் அசைவை (Manual setting) எழுத்துக்கள் மூலம் விவரிக்கவோ முடியும். மேலும், "குறைந்த அசைவு" (Low motion) அல்லது "அதிக அசைவு" (High motion) விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கேமரா மற்றும் பொருளின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தலாம்.
V1 மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள் ஐந்து வினாடிகள் மட்டுமே நீளம் கொண்டவை. ஆனால், பயனர்கள் அதை நான்கு வினாடிகள் வரை நான்கு முறை நீட்டிக்க முடியும். இதன் மூலம் V1 வீடியோக்களை 21 வினாடிகள் வரை உருவாக்க முடியும். மிட்ஜேர்னியின் AI பட மாடல்களைப் போலவே, V1 வீடியோக்களும் தத்ரூபமாக இல்லாமல் சற்று வித்தியாசமாகவே உள்ளன.
V1 மாடலுக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும், சந்தையில் ஏற்கனவே இருக்கும் பிற முன்னணி AI வீடியோ மாடல்களுடன் ஒப்பிடும்போது இது எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications