டெல்லி உள்பட மொத்த வடஇந்தியாவும் குலுங்கியது.. உத்தரகாண்ட் நிலநடுக்கத்தால் நேர்ந்த கதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரகாண்ட் மற்றும் டெல்லியில் இன்று இரவு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

delhi-earthquake-tremors-were-felt-in-delhi-and-its-adjoining-areas-on-today

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று இரவு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 என்ற அளவில் பதிவாகி உள்ளது. உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பிற அண்டை மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.

அதன்படி டெல்லி என்சிஆர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய இடங்களில் உள்ள மக்களும் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இதனால் பலரும் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ''இரவு 10.15 மணிக்கு உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி பகுதியை மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இநத நிலநடுக்கம் பூமிக்கடியில 13 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகி உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் உத்தரகாண்ட், பஞ்சாப், டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா என்று மொத்தம் 5 இடங்களில் உணரப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களின் நிலநடுக்க அனுபவம் பற்றிய விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிர தொடங்கி உள்ளனர்.

தற்போதைய சூழலில் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை. பொதுமக்கள் மட்டுமே பீதியடைந்துள்ளனர். பொதுவாக ரிக்டர் அளவுகோலில் 4.9 என்ற அளவில் பதிவாகும் நிலநடுக்கம் லேசானது நிலநடுக்கம் என்று வகைப்படுத்தப்படும். இதில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படாது. மாறாக ரிக்டர் அளவுகோலில் 7 அல்லது அதற்கு மேலாக பதிவாகும் நிலநடுக்கம் ஆபத்தானவை. அதில் பொருட் சேதங்கள், உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

முன்னதாக இன்றைய தினம் அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் இன்று காலை 4.30 மணியளவில் 4.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதன் தொடர்ச்சியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் இரவில் நிலஅதிர்வு ஏற்பட்டதோடு, டெல்லி உள்பட பிற இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+