வெற்றி பயண பேருந்தில் சண்டை... ப்ளூ சட்டை மாறன் கேட்ட கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இது எங்க பஸ்... நீங்க ஏன் ஏறுறீங்க? என்று பேருந்துக்குள் ஆண்களிடம் பெண்கள் வாக்குவாதம் செய்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. பெண்களுக்கு கட்டணமில்லாத பயணம் என்றால், அந்தப் பேருந்தில் ஆண்கள் பயணிக்கக் கூடாதா என்ற கேள்வியும் சிலரிடம் எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தைத்தான் இயக்குநரும் திரைப்பட விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளப் பதிவில் வேறு ஒரு கோணத்தில் எடுத்து சொல்லியிருக்கிறார்.

தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டம் அக்டோபர் 2-ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாமல் விரைவு, எல்எஸ்எஸ், சொகுசு உள்ளிட்ட சில சேவைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

வெற்றி பயண திட்டம்

இதனால் பெண்களுக்கு உண்மையிலேயே ஒரு பெரிய வசதி கிடைத்திருக்கிறது. தினமும் வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் இதனால் பயனடைகிறார்கள். ஆனால் திட்டம் விரிவுபடுத்தப்பட்ட சில நாட்களிலேயே பேருந்துக்குள் வேறு ஒரு விவாதமும் உருவாகி வருகிறது. அது "பெண்களுக்கு இலவசம் என்றால் ஆண்களின் நிலை என்ன?" என்பதுதான்.

சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் ஒரு வீடியோவில், வெற்றி பயணம் பேருந்தில் பயணிக்கும் ஆண்களிடம் சில பெண்கள், இது எங்க பஸ்... நீங்க ஏன் ஏறுகிறீங்க? என்று வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதாவது, பெண்களுக்காக கட்டணமில்லாமல் இயக்கப்படும் பேருந்து என்ற புரிதல், அந்தப் பேருந்து பெண்களுக்கு மட்டுமே என்ற புரிதலாக மாறிவிட்டதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் இங்கே ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

Vettri Payanam Blue Sattai Maran Vijay

வெற்றி பயண திட்டம் சர்ச்சை

வெற்றி பயணம் என்பது பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் திட்டம். ஆண்கள் அந்த அரசு பேருந்துகளில் ஏறவேகூடாது என்று சொல்லப்பட்ட திட்டம் கிடையாது. பெண்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கிறார்கள். ஆண் பயணிகள் வழக்கமான கட்டணத்தை செலுத்தி பயணிக்கிறார்கள். இந்த பயணம் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணமில்லாதது என்றுதான் கூறப்பட்டுள்ளது.

ப்ளூ சட்டை மாறன் பதிவு

அப்படியிருக்கும்போது பேருந்துக்குள் நீங்க ஏன் ஏறுறீங்க? என்ற கேள்வி வருவதுதான் இப்போது விவாதமாகியிருக்கிறது. இதைத்தான் ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவில், டிக்கெட் வாங்கி பயணிக்கும் ஆண்களின் நிலை மிகக்கொடுமை. பலமுறை.. கூட்ட நெரிசலில் நின்றபடி பயணிக்கிறார்கள். குறிப்பாக..வேலைக்கு செல்லும் நேரங்களில். அதுவும் நீண்ட தூரம் பயணிக்கும் ஆண்கள் மிகவும் பாவம். பேருந்துகளில் பெண்கள் மட்டும் பயணிக்கலாம் என கூறிவிட்டால்.. இனி இந்த சண்டைகள் இருக்காது. ஆனால்.. ஏற்கனவே நஷ்டத்தில் உள்ள அரசு பேருந்து போக்குவரத்து துறை.. மேலும் நஷ்டத்தில் இயங்கும். வெற்றி பேருந்துகள் வாழ்க.
தாய்மாமன் புகழ் ஓங்குக.. என்று கலாய்த்து இருக்கிறார்

2 சொட்டு கண்ணீர்.. கரூர் சம்பவத்தை பற்றி தான் விஜய் சேதுபதி பேசினாரா? ப்ளூ சட்டை மாறன் பாராட்டுராரே?
ப்ளூ சட்டை மாறனின் பதிவை வெறும் ஒரு சமூக வலைதளக் கிண்டலாக மட்டும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் வெற்றிப் பயணம் திட்டம் தொடங்கிய உடனேயே இதன் நிதிச்சுமை, தனியார் பேருந்துகளின் வருவாய் பாதிப்பு, பயணிகளின் எண்ணிக்கை போன்ற விஷயங்களைச் சுற்றியும் விவாதங்கள் உருவாகியிருக்கின்றன. ஒரு தனியார் பேருந்து உரிமையாளரும் இந்தத் திட்டத்தால் தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அதனால் இப்போது பேருந்துக்குள் நடக்கும் ஒரு சின்ன வாக்குவாதம்கூட இந்தத் திட்டம் நடைமுறையில் எப்படி இருக்கிறது என்ற பெரிய விவாதத்துக்குள் வந்து விடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+