AI ரோபோவுக்கு சண்டை போட சொல்லி தரும் எலான் மஸ்க்! எதிர்காலத்தில் ஆபத்து வருமா? அச்சத்தில் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏஐ துறை இப்போது மிக வேகமாக வளர்ந்து வரும் சூழலில் டெஸ்லா நிறுவனம் தனது ரோபோவுக்கு சண்டை போடச் சொல்லித் தருகிறது. இது தொடர்பான வீடியோவை எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அப்படியே மனிதனைப் போடவே சண்டையிடும் இந்த ஏஐ ரோபோ வீடியோ நெட்டிசன்களிடையே கவனம் பெற்றுள்ளது.

இப்போது உலகின் மிக பெரிய எலக்டிரிக் கார் நிறுவனங்களில் ஒன்றாக டெஸ்லா இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா கார்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் தான் இந்தியாவிலும் கூட டெஸ்லா தனது ஷோரூமை திறந்திருந்தது. கார்களை தாண்டியும் டெஸ்லா வேறு சில திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

Tesla Optimus is learning Kung Fu Elon Musk Reveals Pure AI Learning and No Human Help Needed

ஆப்டிமஸ்

அப்படி டெஸ்லாவின் அடுத்த மேஜர் எதிர்காலத் திட்டம் தான் 'ஆப்டிமஸ்' ரோபோ.. எலக்ட்ரிக் கார்களில் புதிய வரலாற்றைப் படைத்த டெஸ்லா அடுத்து இந்த ஆப்டிமஸ் ரோபோ மீது தான் கவனம் செலுத்தி வருகிறது. முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஆப்டிமஸ் ரோபோ பேலன்ஸ் கோஆர்டினேஷன் இல்லாமல் தடுமாறியே வந்தது. ஆனால், அதன் பிறகு சீராகப் பயிற்சி கொடுத்து இப்போது மேம்பட்ட ஒரு ரோபோவாக ஆப்டிமஸ் உருவெடுத்துள்ளது.

கராத்தே

இதற்கிடையே இந்த ரோபோ, கராத்தே கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்றை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். மனிதர்களின் தலையீடு இல்லாமல் ரோபோ கராத்தே பயில்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக 36 நொடிகள் ஓடும் வீடியோவையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் டெஸ்லா ஆப்டிமஸ் ரோபோ கராத்தே பயிற்சியாளருடன் இணைந்து பயிற்சி செய்கிறது.

இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட பிறகு, பயிற்சிக்குத் தயாராகின்றனர். கராத்தே பயிற்சியாளர் செய்யும் ஒவ்வொரு அசைவையும் டெஸ்லா ஆப்டிமஸ் அப்படியே பிரதிபலிக்கிறது. இந்த வீடியோ ரோபோவின் பேலன்ஸ் மற்றும் கோஆர்டினேஷன் கணிசமாக முன்னேறி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பயிற்சி முடிந்ததும், ஆப்டிமஸ் ரோபோ பயிற்சியாளருக்கு அருகில் ரெஸ்ட் நிலைக்குப் போய்விடுகிறது.

முழுக்க முழுக்க ஏஐ

அதேநேரம் இது ஏஐ மூலம் இயங்குகிறதா இல்லை தொலைதூரத்தில் இருந்து மனிதர்கள் இதை கண்ட்ரோல் செய்கிறார்களா என்ற சந்தேகம் நெட்டிசன்களுக்கு எழுந்துள்ளது. பலரும் இந்தக் கேள்வியை ட்விட்டரில் எழுப்பியிருந்தனர். அதற்கு எலான் மஸ்க் நேரடியாகவே பதிலளித்தார். டெஸ்லா ஆப்டிமஸ் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கராத்தே கற்றுக்கொள்வதாகவும், இதில் மனிதர்களின் தலையீடு இல்லை என்றும் எலான் மஸ்க் பதிலளித்தார்.

மனிதர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் ஒரு ரோபோவாக ஆப்டிமஸை டெஸ்லா உருவாக்கி வருகிறது. இருப்பினும், இதற்கு முன்பு முதலில் ஆப்டிமஸால் பல வேலைகளை சுயமாகச் செய்ய முடியாமல் இருந்தது. மனித உதவிகள் அதிகம் தேவைப்பட்டது. சமீபத்தில், டெஸ்லா டின்னரில் பாப்கார்ன் பரிமாறியபோது இந்த ரோபோ தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டது. அந்தளவுக்கு ரோபாவுக்கு மனித உதவி தேவைப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு

ஆனால், இப்போது ஆப்டிமஸ் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய அசைவுகளைக் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டதாக மாறிவிட்டதாம். வெளியில் இருந்து எந்தவொரு இன்புட்டும் தேவைப்படாது. வரும் தகவல்களை அதுவே பிராசஸ் செய்து கொண்டு தேவையான முடிவுகளை எடுத்துக் கொள்ளுமாம்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், இந்த ஆப்டிமஸ் ரோபோ குறித்து எலான் மஸ்க் சில கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது டெஸ்லா ஆப்டிமஸ் ரோபோ மனிதர்களைக் கவனிப்பதன் மூலமே புதிய அசைவுகளைக் கற்றுக்கொள்ளும் என்று அவர் கூறியிருந்தார். ஏற்கனவே பொருட்களை வகைப்படுத்திப் பிரிப்பு, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை யூடியூப் வீடியோவை பார்த்தே ஆப்டிமஸ் கற்றுக் கொண்டதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்தது. அதேநேரம் மனிதர்களுக்கு உதவும் ரோபோவுக்கு சண்டை போட கற்று தருவது ஏன் என்றும் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+