தவெக பண்ணுறது குதிரை பேரம் இல்லாம.. கழுதை பேரமா? கூட்டணி கட்சிகளே குழப்பம்! விட்டு விளாசிய பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக பண்ணுறது குதிரை பேரம் இல்லாம, கழுதை பேரமா?.. சண்முகம் போன்ற கூட்டணி கட்சியினர் விஜய்யின் முகத்திரையை காப்பதற்கான முயற்சிகளை செய்கிறார்கள். இதையே பாஜக செய்து இருந்தால் ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து இருப்பார்கள் என்று பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பேசியுள்ளார். ஒன்இந்தியா யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கோட்டீஸ்வரன் இதனை கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி மட்டுமே தூய சக்தி என்று கூறி வரும் முதல்வர் விஜய், திமுக உள்ளிட்ட பிற கட்சிகளை ஊழல் சக்திகள் என்று கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், விஜய் தன்னை தூயசக்தி என்று கூற தகுதியில்லை எனவும் எம்.எல்.ஏக்களை களவாடுகிறார் எனவும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். விஜய் அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

TVK is not engage in horse-trading Journalist Kodeeswaran critique the views of alliance parties

தவெக அமைச்சர்கள் மீது முறைகேடு புகார்களை எதிர்க்கட்சிகள் அடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன், முதல்வர் விஜய் தான் களவாணி அரசியலை முன்னெடுப்பதாக விமர்சித்து இருக்கிறார். கோட்டீஸ்வரன் கூறுகையில், "விஜய் பத்திரிகையாளரை சந்திப்பது இல்லை. செல்லூர ராஜு, முதல்வரை பார்த்தே களவாணி என்று குற்றச்சாட்டு வைக்கிறார். அதற்கு விஜய் தரப்பே பதில் சொல்லவில்லை.. கூட்டணி கட்சிகள் ஏன் பேசுகின்றன" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் ஒன்இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த முழு பேட்டியை இங்கே காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+