வேலூர் ஜிம் ஓனர்! மயக்க மருந்து தந்து பலாத்காரம் செய்த தம்பதி கைது! 6 மாத பிளாக்மெயில் பகீர் பின்னணி
வேலூர்: வேலூர் ஜிம் ஓனர், நம்பிக்கையோடு ஒரு பெண்ணிடம் பழகி உள்ளார். ஆனால் அந்த பெண்ணோ, பேராசைக்காக மோசமான சதிவலையை தீட்டி, ஜிம் ஓனரை அதில் விழச்செய்துவிட்டார்.. 6 மாதமாக நரக வேதனை அனுபவித்துள்ளார் ஜிம் ஓனர்.. போலீசார் அது தொடர்பாக இப்போது விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. வேலூர் மாவட்டத்தில் இந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் வசித்து வரும் அந்த பெண்ணுக்கு சுமார் 35 வயதிருக்கும்.. இவர் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வருகிறார். இவரது ஜிம்மிற்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானவர்கள் உடற்பயிற்சி செய்ய வந்து செல்கிறார்கள்.

வேலூர் சத்துவாச்சாரி ஜிம் ஓனர்
அந்தவகையில் சத்துவாச்சாரி அன்னை தெரசா தெருவைச் சேர்ந்த எப்சியா (33) என்ற பெண், கடந்த வருடம் இந்த ஜிம்மில் கஸ்டமராக வந்து சேர்ந்தார்.. வேலூரில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார் எப்சியா.. இவர் ஜிம் உரிமையாளரான அந்த பெண்ணுடன் மிக நெருக்கமாகப் பழக தொடங்கியுள்ளார்.
நாளடைவில் தன்னுடைய குடும்ப விவரங்கள் உட்பட அனைத்தையுமே எப்சியா, ஜிம் ஓனரிடம் சொல்லும் அளவுக்கு நெருக்கமாகி விட்டார்.. தன்னுடைய கணவர் மணிவண்ணனுக்கு (38) சரியான வருமானம் இல்லை, குடும்பத்தில் கஷ்டம் அதிகமாக உள்ளது என்றெல்லாம் வீட்டின் சோகக் கதைகளை சொல்வாராம் எப்சிபா.. ஒருகட்டத்தில் தன்னுடைய வறுமைய சொல்லி, தனக்கு ஏதாவது உதவி செய்யுமாறும் ஜிம் ஓனர் பெண்ணிடம், கேட்டுள்ளார்..
எப்சிபா & கணவர்
நன்றாக பழகிய பெண் என்பதால், மனிதாபிமான அடிப்படையில் அவரிடம் இரக்கம் காட்டியுள்ளார் ஜிம் உரிமையாளர்.. ஒருகட்டத்தில் தங்களின் வீட்டிற்கு வருமாறும் எப்சியா வற்புறுத்த தொடங்கியுள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் 20ம் தேதி தனது மகனின் பிறந்தநாள் விழா என்று சொல்லி, ஜிம் உரிமையாளரை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்துள்ளார் எப்சியா.
அங்கு சென்ற ஜிம் உரிமையாளருக்கு எப்சியாவும், அவரது கணவர் மணிவண்ணனும் சேர்ந்து மயக்க மருந்து கலந்த கூல் டிரிங்ஸை தந்துள்ளனர். அதை குடித்த சில நிமிடங்களிலேயே அந்த பெண் நிலைகுலைந்து மயக்கமடைந்தார். அப்போது, மணிவண்ணன், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அவரது மனைவி எப்சியாவே தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார்.. அத்துடன் நிர்வாண போட்டோக்களையும் எடுத்துள்ளார்.
ஜூஸில் மயக்க மருந்து
மயக்கம் தெளிந்து எழுந்தபோது தனக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்து அந்த பெண் கதறி அழுதுள்ளார். அப்போதுதான் தான் ஒரு மோசடி தம்பதியிடம் மாட்டிக்கொண்டதை அவர் உணர்ந்தார்.
பிறகு எப்சிபாவும் அவரது கணவரும், இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால், ஆபாச வீடியோ, போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள்.. மானத்திற்கு அஞ்சிய அந்த பெண், கடந்த 6 மாதங்களாக அந்த தம்பதி கேட்டபோதெல்லாம் பணத்தை கொடுத்துள்ளார். இப்படியே மிரட்டி மிரட்டி, சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மோசடி தம்பதியினர் பறித்துள்ளனர்.
மிரட்டி மிரட்டியே நாலரை லட்சம்
ஒருகட்டத்தில் தன்னிடம் கொடுக்க பணம் எதுவும் இல்லை என ஜிம் உரிமையாளர் கைகளை விரித்தபோது, தம்பதியினர் விடாமல் வீடியோக்களைக் காட்டி மறுபடியும் அச்சுறுத்தியிருக்கிறார்கள்.. இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ஜிம் பெண் உரிமையாளர், போலீசுக்கு செல்வதே மேல் என்று துணிந்தார்.. நேற்றைய தினம் வேலூர் மகளிர் ஸ்டேஷனில் புகாரும் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கள பிரியா உடனடியாக வழக்குப் பதிவு செய்து அதிரடி விசாரணையில் இறங்கினார்..
புகாரில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் உறுதியானதையடுத்து, மணிவண்ணன், அவரது மனைவி எப்சியா 2 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த தம்பதியினரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. அந்த செல்போனை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.. இன்னும் இதுபோல எத்தனை பெண்களை இந்த தம்பதியினர் ஏமாற்றியிருக்கிறார்களோ தெரியவில்லை.. அதனால் தம்பதியிடம் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..!!!












Click it and Unblock the Notifications