Icecream: மதுபான Flavour-ல் ஐஸ்கிரீம் விற்பனை புகார்! சென்னை திருமங்கலம் கடைக்கு சீல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருமங்கலத்தில் மதுபான சுவைகளில் ஐஸ்கிரீம்கள் தயாரித்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர்.

சென்னை திருமங்கலம் பகுதியில் ஐஸ்கிரீம் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் பல்வேறு ஐஸ்கிரீம்கள் உள்ளன.

Ice cream shop seal

இந்த கடையில் பிளாக் கரென்ட், ப்ளூ பெர்ரி, டார்க் சாக்லேட், மேங்கோ, லிச்சி உள்ளிட்ட ஏராளமான வகைகளில் ஐஸ்கிரீம்கள் இருக்கின்றன. ஆனால் ரெட் வைன், வோட்கா, விஸ்கி, ரம் ஆகியவற்றின் ஃபிளேவர்களில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்டாகிராமில் கிடைத்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதாவது உணவு பிரியர்கள் கடைகளுக்கு சென்று ரிவ்யூ செய்து தங்களது சேனலில் இன்ஸ்டா வீடியோவாக போடுவது வழக்கம். அந்த வகையில்தான் பெண் ஒருவர் அந்த ஐஸ்கிரீம் கடையில் மதுபான ஃபிளேவர்களில் ஐஸ்கிரீம்கள் இருப்பதாக ரிவ்யூ சொன்னார்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்களில் மதுபான சுவையா? என இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பார்ப்போரை அதிர வைத்தன.

இதுகுறித்து புகாரின் பேரில் இந்த ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மதுபான சுவை கொண்ட ஐஸ்கிரீம்களின் மாதிரிகளை பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ஐஸ்கிரீம் மாதிரிகள் அனைத்தும் தற்போது சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதுதான் இந்த ஐஸ்கிரீம்களில் உண்மையிலேயே மதுபானம் சேர்க்கப்பட்டிருக்கிறதா இல்லை சுவைக்காக (Flavour) எசன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவரும்.

இந்த நிலையில் இந்த கடையில் தரமற்ற பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வந்ததாக கூறி உணவு பாதுகாப்புத் துறையினர் அந்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர் பிரித்திவிராஜ் போலியான ஆவணங்கள் கொடுத்து உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+